கலந்தாய்வு
சென்னை: இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத் துறை பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் பிப்.,22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில், தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத் துறை பதவிக்கானமூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் பிப்.,22ம் தேதி நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கான நாள், நேரம்மறும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.