உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜி.எச்., ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்

ஜி.எச்., ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 13,211 அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் முதல் டிரைவர்கள் வரையிலான அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் முதல், பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயமாக்க, மருத்துவ பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, மாவட்டந்தோறும், ஐ.டி., ஒருங்கிணைப்பாளரை நியமித்து, முக்கிய தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவரவர் மொபைல் போனில் பயோமெட்ரிக் ஆப்பை பதிவிறக்கம் செய்து, குறித்த நேரத்தில் பணிபுரியும் இடத்தில் தங்களது, 'பேஸ் ஐடி' வாயிலாக, தினமும் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.டாக்டர்கள் காலை 7:30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். விடுப்பு, ஆப் சென்ட், பிற நிர்வாக பணி காரணமாக மருத்துவமனை வராத டாக்டர்கள் உள்ளிட்ட விபரங்களை, மருத்துவ பணிகள் இயக்குநருக்கு தினமும் காலை 8:00 மணிக்கு, 'அப்டேட்' செய்ய வேண்டும். இந்த அறிக்கையை மருத்துவ பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.-- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழன்
பிப் 27, 2025 10:50

நாங்க விடியலின் குழந்தைகள் காலையில் விரல் ரேகையை பதிவு செய்துவிட்டு மீண்டும் மாலையில் வந்து பதிவு செய்து விட்டு சொந்த வேலைக்கு போய் விடுவோம் எல்லாம் கோபாலபுரத்து குழந்தைகள் இப்ப என்ன செய்வீங்க???


பிரேம்ஜி
பிப் 27, 2025 07:50

இதனால் என்ன பிரயோஜனம்? சரியான நேரத்தில் biometric கில் அட்டெண்ட் பதிவு செய்து விட்டு சொந்த வேலையை பார்க்க வெளியே போய் விடுவார்கள்! வராமல் கையெழுத்து மறுநாள் சேர்த்து போடுவது முடியாது! அவசியம் இரண்டுமுறை அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் சற்று சிரமம்! சற்று அதிக பெட்ரோல் செலவு! ஈடுசெய்ய அப்பாவி பொது மக்களிடம் அதிக அன்பளிப்பு பெற வேண்டும்! நாய் வாலைக் கூட நிமிர்த்தி விடலாம்! அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்களைக் திருத்தவே முடியாது!


Prabakaran J
பிப் 27, 2025 05:03

Govt gives smartphones and recharges every month instead of installing biometric device. Dravida model - 23 mmm pulikesi Arasu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை