வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திராவிட அக்காவிற்கு இது போதுமா?
வந்தால் தான் நிச்சயம்!
ஆனா ஸ்டிக்கர் மட்டும் முன்கூட்டியே தயார்?.
புதுடில்லி: “வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை கூட்டுவது மற்றும் நவீன மயமாக்குவதன் வாயிலாக, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் மீரட் - லக்னோ, தமிழகத்தின் சென்னை - நாகர்கோவில், மதுரை - கர்நாடகாவின் பெங்களூரு, இடையே மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.அப்போது பிரதமர் பேசியதாவது:
ரயில்வே துறையின் பல ஆண்டுகால கடின உழைப்பின் வாயிலாக, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் வரை, நாங்கள் தொடர்ந்து உழைப்போம்.இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மட்டும் 2.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே குறித்துள்ள பழைய பிம்பத்தை மாற்றுவதற்காக, பல புதிய உயர் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய தென் மாநிலங்களில் வளர்ச்சி இன்றியமையாதது. தென் மாநிலங்களில் திறமைகளும், தொடர்ச்சி 6ம் பக்கம்
திராவிட அக்காவிற்கு இது போதுமா?
வந்தால் தான் நிச்சயம்!
ஆனா ஸ்டிக்கர் மட்டும் முன்கூட்டியே தயார்?.