புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத்தை நேரில் அழைத்து, அக்கட்சி தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o39ze83c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழில் சந்திரமுகி - 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 38. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சலின் மண்டி தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்று, முதன்முறையாக எம்.பி., ஆனார். சந்திப்பு
விவசாயிகள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்களில், சர்ச்சைக்குரிய வகையில், கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், சண்டிகர் விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பெண் அதிகாரி ஒருவர், கங்கனாவை கன்னத்தில் அறைந்த சம்பவமும் அரங்கேறியது.கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள எமர்ஜென்சி படம், செப்., 6ல் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'விவசாயிகள் போராட்டத்தின் போது, மோடி அரசு வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வங்கதேசத்தில் நடந்தது நம் நாட்டிலும் நடந்திருக்கும். 'வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதும், போராட்டம் தொடர்ந்ததற்கு, சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சக்திகள் காரணமாக இருந்திருக்கலாம்' என்றார்.கங்கனாவின் இந்த பேச்சுக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்த நிலையில், 'கங்கனாவின் கருத்தில் உடன்படவில்லை. எதிர் காலத்தில் கட்சியின் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு அதிகாரம் இல்லை' என, பா.ஜ., விளக்கம் கொடுத்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், கங்கனாவின் இந்த கருத்து, பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பா.ஜ., - எம்.பி., கங்கனா ரணாவத்தை, அக்கட்சி தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா, நேற்று காலை நேரில் அழைத்து பேசினார். 30 நிமிடங்களுக்கும் மேல் இந்த சந்திப்பு நடந்தது. அறிவுரை
அப்போது, முக்கிய விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் போது, கவனத்துடன் பேச வேண்டும் என்றும், தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அறிவுரை என தகவல்கள் தெரிவித்தாலும், கங்கனாவுக்கு எச்சரிக்கையே விடப்பட்டதாகவே, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நட்டாவை கங்கனா இரு முறை சந்தித்துள்ளார். இதற்கிடையே, சிரோண்மணி அகாலி தளம் அமிர்தசரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான சிம்ரஞ்சித் சிங் மான், கங்கனா குறித்து அவதுாறான கருத்து தெரிவித்தார். இதற்கு கங்கனா, ஹரியானா மகளிர் கமிஷன் தலைவர் ரேணு பாட்டியா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.