உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மன்னிப்பு கோர முடியாது: பா.ஜ., அஸ்வத்தாமன் மனு

மன்னிப்பு கோர முடியாது: பா.ஜ., அஸ்வத்தாமன் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும்படியான பேச்சுக்காக, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் மீது, நாகூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஜாமின் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, 'இரு மதங்களுக்கு இடையே, பிரச்னையை துாண்டும் வகையில் இனி பேச மாட்டேன் என, விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற நிபந்தனை விதித்து, ஜாமின் வழங்கினார்.அதை ஏற்க மறுத்த அஸ்வத்தாமன், தீர்ப்பில் உள்ள நிபந்தனையை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டு, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த 1995ல் ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டை, நாகூர் ஹிந்து அமைப்பின் நிர்வாகி தங்க முத்துகிருஷ்ணனுக்கு, முஸ்லிம் தீவிரவாதி அபூபக்கர் பார்சல் வாயிலாக அனுப்பியுள்ளார். பார்சலை வாங்கி பிரித்தபோது குண்டு வெடித்தது. அதில், தங்க முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் அம்மாள் இறந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஜூலை மாதமும், நாகூரில் தங்கம் அம்மாளின் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும், அதேபோல நடத்த முயற்சி நடந்தது. போலீசார் அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத்தை நாடினர். பின், அனுமதியுடன் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சார்பில் நான் பங்கேற்றேன்.'வெடிகுண்டை பார்சலில் அனுப்பி, தங்கம் அம்மாள் இறப்புக்குக் காரணமான முஸ்லிம் தீவிரவாதி அபூபக்கரை, 24 ஆண்டுகளாக போலீசார் பிடிக்கவில்லை. இதுதான் போலீஸ் விசாரணையின் லட்சணம். அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது தி.மு.க., தான்' என பேசினேன். இந்த பேச்சுக்காக, இரு மதங்களுக்கு இடையே பிரச்னையை துாண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்கு போட்டுள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை; ஜாமின் மனு மீதான விசாரணையின்போதும் தெரிவிக்கவில்லை. அரசு தரப்பு கேட்டுக் கொண்டதால், 'இனிமேல் மத மோதலுக்கு வித்திடும்படியாக பேச மாட்டேன் என, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கோர வேண்டும்' என, உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையே நடக்கவில்லை; அதற்குள் எப்படி மன்னிப்பு கோர முடியும்? அதுவும் மத மோதலுக்கு வித்திடும்படியாக பேச மாட்டேன் என, பிரமாண பத்திரம் எப்படி தாக்கல் செய்ய முடியும்? அப்படி பத்திரம் தாக்கல் செய்தால், நானே தவறை ஒப்புக்கொண்டதாகிவிடும். பின் எப்படி வழக்கு பொய்யானது என வாதிட முடியும்?வழக்கு விசாரணை துவங்கும் முன், எனக்கு நீதிமன்றம் எப்படி தண்டனை தர முடியும்? மன்னிப்பு என்பதும் தண்டனை வகையில் சேர்ந்தது தான். அதனால், அதை ஏற்க முடியாது. தீர்ப்பை மாற்றிக் கொடுங்கள் எனக் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அஸ்வத்தாமன் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anand
ஆக 16, 2024 18:02

நீதிமன்றங்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கின்றன?


தமிழ்வேள்
ஆக 16, 2024 16:38

கொலைசெய்தவன் மார்க்க ஆசாமி ...அவன் பெயரை சொல்வது என்ன தவறு ? அதில் என்ன சமூக நல்லிணக்கம் கேடு வந்தது ? மார்க்கம் ஹிந்துவை கொல்லும் போது மத நல்லிணக்கம் கொடிகட்டி பறந்ததா?


Kumar Kumzi
ஆக 16, 2024 16:16

இந்த கேடுகெட்ட வந்தேறி மதக்காரன் இதற்கு குண்டு வைத்து கொலை செய்ய வில்லையா எதுக்கு மன்னிப்பு கோரா வேண்டும் விடியலின் கைக்கூலி படையால் டாஸ்மாக் நாடு அழிவது உறுதி


Iniyan
ஆக 16, 2024 14:17

நீதி மன்றங்கள் எப்போதும் அயோகியதனமாக தீர்ப்பு தரும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 10:23

வழக்கறிஞர் அஸ்வத்தாமனின் லாஜிக் மிகவும் சிம்பிள் .... ஆனா அது அறிவார்ந்த கனம் கோர்ட்டாருக்கே புரியலன்னா பார்த்துக்குங்க .... எதற்கும் லாயக்கில்லா முரடர்கள், வெறுக்கப்படுபவர்கள் அட்வகேட் ஆகிறார்கள் .... பிறகு அவர்களே நீட்டிப்பாட்டி ஆகிறார்கள் .... தீர்ப்பு கொடுக்கிறார்கள் ....


Sridhar
ஆக 16, 2024 10:05

சபாஷ் குற்றவாளிய கண்டுபிடிச்சு தண்டனை கொடுக்க துப்புக்கெட்ட அரசு, தேசியவாதிகளை கைது செய்யுறதுல காட்டும் ஆர்வம் அலாதியானது. மத்திய அரசு திருட்டு கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அனைவரையும் உள்ளே வைத்து லாடம் கட்டவேண்டும். அப்பாவி மக்கள் இவர்களின் உண்மை முகத்தை அறிந்துகொள்ள நீண்டகாலம் ஆகும். ஆகவே, இந்த கும்பல் தேர்தலில் தோற்பார்கள் அதற்குப்பிறகு அவர்கள் ஆட்டம் அடங்கும் என்று கற்பனை செய்துகொண்டு இல்லாமல், ED NIA சிபிஐ எல்லோரும் சேர்ந்து ஒரே பாய்ச்சலில் திருட்டு கும்பலை மொத்தமாக தூக்கவேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 16, 2024 10:05

அருமை... இதுதான் தில்லு. வாழ்த்துக்கள்.


krishnamurthy
ஆக 16, 2024 09:57

சரியான கருத்தே


Shekar
ஆக 16, 2024 09:42

அப்பரசண்டி யுவர் ஆனரா இருக்கும்


பேசும் தமிழன்
ஆக 16, 2024 08:34

உண்மையிலேயே அருமையான பதில்.... அப்படி கடிதம் கொடுத்தால்.... தான் பேசியது தவறு என்று தானே ஒப்புக் கொண்டதாக அர்த்தம் ஆகி விடும்......24 ஆண்டுகளாக ஒரு குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை..... அந்த நிலையில் காவல்துறை இருக்கிறது என்று கூறுவது போல் எப்படி குற்றமாக முடியும் ???


மேலும் செய்திகள்









புதிய வீடியோ