உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சி.ஐ.எஸ்.எப்., அலுவலகத்திற்கு சோழ இளவரசன் பெயர்!

சி.ஐ.எஸ்.எப்., அலுவலகத்திற்கு சோழ இளவரசன் பெயர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரக்கோணத்தில் உள்ள, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்திற்கு, ராஜாதித்ய சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.அதாவது, சி.ஐ.எஸ்.எப்., - ஆர்.டி.சி., என்று அழைக்கப்பட்டது, இனி, ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலம் என அழைக்கப்படும். முதலாம் பராந்தகனின் மகனான சோழ இளவரசன் ராஜாதித்ய சோழன், 948 - 949ம் ஆண்டு நடந்த தக்கோலம் போரில், சோழப்படைகளுக்கு தலைமை தாங்கினார். இப்போரில், அவர் இறந்ததுடன், அவரது படை தோற்கடிக்கப்பட்டது.ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலத்தின் புதிய அலுவலக முகவரி, 'துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம், ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலம் அஞ்சல் அலுவலகம், சுரஷா வளாகம், அரக்கோணம் தாலுகா, ராணிப்பேட்டை மாவட்டம் - 631152' என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ்வேள்
மார் 02, 2025 15:02

நியாயமாக..காட்டு மன்னார் குடியில் வீராணம் ஏரி கரையில் இராஜாதித்ய சோழருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டியது. திருட்டு திராவிட அரசுகளால்... வீராணம் ஏரியால் துட்டு பார்த்த கருணாநிதிக்கு கூடி ஒரு நன்றியறிதல்இல்லை


அப்பாவி
மார் 02, 2025 11:13

முதல்ல அங்கே வேலை.பாக்கறவங்க தமிழில் தேர்ச்சி பெறச் செய்ங்க. பேரையும் தமிழில் எழுதுங்க.


நிக்கோல்தாம்சன்
மார் 02, 2025 10:06

நல்ல முன்னெடுப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை