உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் நேருவை சந்தித்ததால் சர்ச்சை

மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் நேருவை சந்தித்ததால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : அண்ணாமலை பல்கலையின் போலி கல்விச் சான்றிதழ்கள் அளித்தது மற்றும் ஆயுஷ் டாக்டர் போலி சான்றிதழ் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட திருச்சி போலி டாக்டர், அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருச்சியைச் சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இருவரும் சித்த மருத்துவர்கள் எனக் கூறி வந்தனர்; அ.தி.மு.க.,விலும் இணைந்து செயல்பட்டனர். தற்போது தி.மு.க.,வில் உள்ளனர். சுப்பையா பாண்டியன், சித்த மருத்துவ சங்கம் துவக்கி, அதன் தலைவராகவும் உள்ளார்.இந்நிலையில், அண்ணாமலை பல்கலை பட்டப்படிப்புக்கு, போலி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வெளிமாநில மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெயரில், போலி மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்கள் அளித்த வழக்கில், கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால், ஆறு மாதங்களுக்கு முன் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டார்.அண்மையில், இவர் ஜாமினில் வெளி வந்தார். சில நாட்களுக்கு முன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை, தன் மனைவி தமிழரசியுடன் சென்று சந்தித்தார். அப்போது, அமைச்சர் நேருவுக்கு பட்டுத் துண்டு அணிவித்து, சுப்பையா பாண்டியன் ஆசி பெற்றார்.இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் வெளிவந்தன. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி டாக்டரை அமைச்சர் சந்தித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Chandrasekaran Balasubramaniam
பிப் 27, 2025 10:25

இனம் இனதோடு தான் சேரும்.


Ram Moorthy
பிப் 26, 2025 22:37

அந்த நேருவே பெரிய லஞ்சம் ஊழலில் ஊறிய திருட்டு கிழவன். இதில் எவனை சந்தித்து மானம் போகப் போகிறது


நிக்கோல்தாம்சன்
பிப் 26, 2025 21:26

ஆமா இவரின் மோசடி நேருவுக்கு தெரியுமா , இல்லை கும்பலோடு சேர்ந்து கோஷம் போட்டு பட்டாடை அணிவித்து சென்றாரா ?


naranam
பிப் 26, 2025 19:43

ஆட்சி இவரிடமிருந்து குரங்கு கையில கிடைத்த பூமாலை போல சின்னா பின்னமாகி தீ ய முகர்களின் கையில் சென்று விட்டது. பேராசை பெரு நஷ்டமானது!


venugopal s
பிப் 26, 2025 15:45

தவறு தான்,அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும்! பிழைக்கத் தெரியாதவர்கள்!


naranam
பிப் 26, 2025 15:07

திமுக வினர் வேறு எங்கதான் போவாங்க? கூட்டாளிகளோடு தானே? அங்கு தான் அவர்களுக்குப் பாதுகாப்பு அதிகம்!


Seekayyes
பிப் 26, 2025 14:22

எல்லாம் எங்க அங்காளி பங்காளி மக்காதான்,மாப்பு. இதெல்லாம் செய்தினு போட்டுக்கிட்டு.


இறைவி
பிப் 26, 2025 13:36

இது என்னய்யா புதிர். கடவுள் இல்லை என்று கூவும் தீயமுக கட்சியின் அமைச்சர் நேரு வீட்டில் கடவுள் சிலைகளா? அப்போ, ஊருக்கு மட்டும்தான் உபதேசமா. வீட்டில் பக்திமான்களா. தீயமுக கட்சி உபிக்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரும் கும்பலுக்கும் புரிந்தால் சரி.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 26, 2025 15:56

அதெல்லாம் சாமி இல்லீங்கோ. ஷோ பீஸுங்கோ.அப்படின்னு சொல்வானுங்க.


Ramesh Sargam
பிப் 26, 2025 13:14

ஒரு மோசடிக்காரர் மற்றொரு மோசடிக்காரரை தொழில் ரீதியாக சந்தித்ததை என்ன சர்ச்சை செய்யவேண்டியிருக்கு?


Barakat Ali
பிப் 26, 2025 12:34

ஒரு 420 இன்னொரு 420 ஐ சந்திப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது ????


சமீபத்திய செய்தி