உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்... என்னாச்சு மோடிக்கு?

டில்லி உஷ்ஷ்ஷ்... என்னாச்சு மோடிக்கு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார் மோடி. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றும்போது, 'எந்த நிலையிலும் பல சீர்திருத்தங்களை கொண்டு வருவேன்' எனக் கூறினார்.இதனால், 'கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், மோடி முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே செயல்படுவார்' என, சொல்லப்பட்டது.சமீபத்தில், மத்திய அரசின் இணை செயலர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அல்லாத நேரடியாக விண்ணப்பங்களை வரவேற்றது, மத்திய அரசின் தேர்வாணையம். இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல், 'இது பட்டியலினத்தவர்களை பாதிக்கும்' என்றார்.உடனேயே, பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்தார்; இது, பா.ஜ.,விற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அடுத்த நாளே, மத்திய தேர்வாணையம், இணை செயலர் பதவிக்கான விளம்பரத்தை, 'வாபஸ்' பெற்றது.'நெருக்கடியில் சிக்கி விட்டாரா மோடி' என, அரசியல் வட்டாரங்களில் பேச்சு ஆரம்பித்து விட்டது. இந்த சர்ச்சை முடிவதற்குள், இன்னொரு விஷயமும் பிரச்னையை கிளப்பி விட்டது.ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.,வின் பொதுச்செயலராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 'இவர் ஜம்மு - காஷ்மீர் தேர்தலை கவனித்துக் கொள்வார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2015ல் ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ., -- பி.டி.பி., கூட்டணி ஆட்சி அமைக்க, அடித்தளம் அமைத்தவர் ராம் மாதவ். பிற்பாடு பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.,சில் முக்கிய பதவி வகித்த மாதவ், மீண்டும் பா.ஜ.,வில் வருவது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., ஆசியோடு தான் மாதவ் பா.ஜ.,வுக்கு மீண்டும் வந்துள்ளார். 'ஆர்.எஸ்.எஸ்., உடன் மோடிக்கு கருத்து வேறுபாடு' என, செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், 'மாதவின் நியமனம், மோடி தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பதை கேள்விக்குறியாக்கி விட்டது' என, பா.ஜ.,விற்குள்ளாகவே குரல்கள் ஒலிக்கின்றனவாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivagiri
ஆக 25, 2024 23:19

சின்ன சின்ன சமரசங்கள் , வளைந்து கொடுப்பது போல தோற்றம் , மட்டுமே - எதிரிகளுக்கு சின்ன வெற்றி கிடப்பது போன்ற சந்தோசத்திற்காக ,


அப்பாவி
ஆக 25, 2024 21:32

எப்புடி இருந்த நான்... எல்லோருக்கும் நடக்கும்.


VENKATASUBRAMANIAN
ஆக 25, 2024 19:08

இப்போதைக்கு மோடியை விட்டால் வேறு யாருக்கும் வாய்ப்பில்லை. சும்மா சின்ன சின்ன விஷயங்களை பேசி ஆறுதல் அடைய வேண்டியதுதான்.


krishnan
ஆக 25, 2024 22:14

மோடி , நிர்மலா ஜி இருவரும் பிஜேபி யை 100 க்கு கீழே கொண்டு வந்து விடுவார்கள். பரம ஏழை , கிராமம் , க்ரமத்தானுக்கு ஏதும் உருப்படியா செய்யலை. இரும்பூ நிர்வாகம் வங்காள தேசத்துக்கு முன் பிளாஸ்டிக் ஆகி விட்டது...... சின்ன , அணு ஆற்றால் இல்லாத , துரோகிகள் மோடிக்கு பாடம் எடுத்து ஆடியது . வழக்கம் போல இந்துக்கள் கொள்ள படுகிறார்கள். அமெரிக்காவை insult பண்ணி விட்டார் மோடி என மார் தட்டியது வினையில்.


venugopal s
ஆக 25, 2024 17:07

காற்று போகாத பலூன் உண்டா?


அப்பாவி
ஆக 25, 2024 15:40

யார் ஆதரவும்.இல்லாம போரை ரெண்டு பேரைக்.கட்டிப்புடிச்சு போரை நிறுத்திட்டு வந்திருக்காரு.


Saai Sundharamurthy AVK
ஆக 25, 2024 11:40

மோடிஜியின் டெக்னிக் என்பது வேறு. ஆட விட்டு அடிப்பவர். ஓட விட்டு சுடுபவர். பொறுத்திருந்து பாருங்கள்.....!!!


ஆரூர் ரங்
ஆக 25, 2024 10:37

இது போல தான் EWS இடஒதுக்கீடு, 370 ம் பிரிவு நீக்க சட்டம் நிறைவேற்றம் பற்றியும் முன்பு சந்தேகித்தனர். ஆனால் சாமர்த்தியமாக காய் நகர்த்தி பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றி அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்தார்.


கனோஜ் ஆங்ரே
ஆக 25, 2024 11:27

அய்யா... அங்குசாமி. கொஞ்சம் பொறு... ரொம்ப பீத்திக்காதே... EWS இடஒதுக்கீடு, 370 ம் பிரிவு நீக்க சட்டம் நிறைவேற்றம்..இதெல்லாம் அசுர பலத்துடன் மோடி ஆட்சியில் இருந்தபோது... அதாவது நீங்க சொல்றது போனமாசம்... நான் சொல்றது இந்த மாசம்... புரியுதா...?


Velan Iyengaar
ஆக 25, 2024 11:31

சரியான ஞானசூனியமா இருக்கும் போல இந்த நிலைய வித்துவான் ..... மைனாரிட்டி அரசுக்கும் மெஜாரிட்டி அரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத ஞானசூனியம் இப்போ அந்த பக்கம் நெளிஞ்சா இங்க இடிக்கும் .. இந்த பக்கம் நெளிஞ்சா அங்க இடிக்கும்


Velan Iyengaar
ஆக 25, 2024 09:38

சோதனையை பாருங்கப்பா ஆனா நமக்கு ஒரே சிரிப்பு தான் .... மகிழ்ச்சி தான் ... சந்தோசம் தான்... புளங்காகிதம் தான் .....ஆடுவோமே பள்ளு பாடுவோமே .. ஆனந்தம் வந்து சேரட்டும் என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே


சின்னப்பன்
ஆக 25, 2024 09:27

இனிமே தேவ கவுடா ஆட்சி ரேஞ்சில்தான் இவர் ஆட்சியும். இருக்கும். இது வெறும் டிரெயிலர்தான் மாமு. மெயின் பிகசர் போகப்போக தெளிவா தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை