நடிகர் விஜயின், தி கோட் படம் பார்க்க, கட்சியின் லெட்டர்பேடுகள், விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கக்கூடாது என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் துவக்கியுள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள, தி கோட் திரைப்படம், உலகம் முழுதும் நேற்று வெளியானது. தமிழகத்தில், காலை 9:00 மணி சிறப்பு காட்சிக்கும் அனுமதி தரப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9vp5j0uq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி கோட் படத்திற்கு அரசு தரப்பில் எந்த நெருக்கடி தராவிட்டாலும், கட்சி மாநாடு நடத்த, தி.மு.க., தரப்பில் நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. அரசியல் பாதை
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
தி கோட் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சினிமாவில் தன் இடத்தை பிடித்துக் கொள்ளவும், அதற்கு விஜய் வழிவிடுவது போலவும் காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார். இது, அவருடைய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் காந்தி, நேரு, சுபாஷ்சந்திர போஸ் ஆகியோரை நினைவுகூரும் காட்சிகளும், அவரது அரசியல் பாதைக்காக வைக்கப்பட்டுள்ளன. விஜயகாந்த், ரஜினி ரசிகர்களும், கிரிக்கெட் வீரர் டோனியின் ரசிகர்களும், விஜய்க்கு ஆதரவு தரும் வகையிலான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும் வெளியாகியுள்ள தியேட்டர்களில், ஐந்து நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. ஹவுஸ்புல்லான தியேட்டர்களில் படம் பார்க்க, தி.மு.க.,வினரும், அவர்களின் குடும்ப உறுப்பினரும் விரும்புவர். பதிவிட கூடாது
டிக்கெட் இல்லை என்பதால், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில், கட்சி பதவி லெட்டர் பேடுகள், விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தி, டிக்கெட் வாங்க பயன்படுத்தக்கூடாது. விஜய் படத்தை பற்றி எந்த விமர்சனத்தையும், சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் பதிவிடக்கூடாது என மேலிடம் உத்தரவிட்டுஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -