வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்டி சொல்லி ஒரு பெண் பலரை ஏமாற்றி உள்ளார். பல லட்சம் இவரால் ஏமாற்றப்பட்டு உள்ளது . அரசு நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தந்தால் நல்லத
தமிழ் தெரிஞ்சா ஏர்போர்ட் வேலை கிடையாது.
சென்னை: விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலி விளம்பரங்களை நம்பி, வேலை தேடுபவர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரபல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல வழிகளில் மோசடி நடக்கிறது. குறிப்பாக, ஆன்லைனில் அரசு நிறுவனங்களில் உடனடி வேலை என, போலி விளம்பரம் செய்யப்படுகிறது. வேலை தேடுபவர்கள் உண்மை தன்மையறிமால், அவற்றை நம்பி பணம் செலுத்தி ஏமாந்து விடுகின்றனர். நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலைவாங்கி தருவதாக கூறி, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையத்தில் வேலைக்கு சேர, எழுத்து தேர்வு உள்ளிட்ட பல வழிமுறைகள் உள்ளன. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறோம் என்று, விமான நிலைய ஆணையத்தில் யாரும் சொல்வது கிடையாது. கல்வி மற்றும் தேர்வு அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.மோசடி நபர்களால் உருவாக்கப்படும், போலி இணையதளங்களில் வெளிவரும் விளம்பரங்களை நம்பி, யாரும் ஏமாற வேண்டாம். காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, விமான நிலைய ஆணையங்களின் நேரடி இணையதளம் மற்றும் முன்னணி செய்தி தாள்களில் விளம்பரம் செய்யப்படும். கூடுதல் விபரங்களை, aai.aero/en என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்டி சொல்லி ஒரு பெண் பலரை ஏமாற்றி உள்ளார். பல லட்சம் இவரால் ஏமாற்றப்பட்டு உள்ளது . அரசு நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தந்தால் நல்லத
தமிழ் தெரிஞ்சா ஏர்போர்ட் வேலை கிடையாது.