உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குட்கா தாராளம்; அதிரடி அவசியம்

குட்கா தாராளம்; அதிரடி அவசியம்

திருப்பூர்: திருப்பூரில் இளைஞர்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர் கூட குட்கா, பான்மசாலா வாங்கி, பயன்படுத்துவது ப(வ)ழக்கமாகி விட்டது. வாங்குவோர், பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மறைமுக விற்பனைக் கடைகள் எண்ணிக்கையும் அதிகரித் துக் கொண்டே இருக்கிறது.திருப்பூருக்கு வரும் ரயில் மற்றும் லாரிகளில் பண்டல்களாகவும், வெளியூரில் இருந்து மொத்த விற்பனையாளர் மற்றும் கடை நடத்துவோரின் சொந்த காரில் நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் மூட்டை மூட்டையாக பான்மசாலா வந்து இறங்குகிறது. பல பண்டல்களுடன் இதுவும் ஒரு பண்டலாக வரு வதால், பான்மசாலா நுழைவை தடுக்கவே முடியவில்லை.சந்து வீதி, குறுக்கு தெருக்களில் டூவீலர்களில் எளிதாக 'சப்ளை' நடந்து விடுகிறது. பான்மசாலா விற்பது கண்டறிப்பால், அபராதம் விதிப்பதுடன், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என்பதால், மொத்த விற்பனையாளர்கள் கடைகளில் வைக்காமல், குடோன் மற்றும் வீடுகளில் பதுக்கி விடுகின்றனர்.

மும்மடங்கு லாபம்

யார் அதிகம் வாங்குவார், எந்த கடையில் இருந்து யார் வருவார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் மொத்த வியாபாரிகள், போலீஸ் கண்காணிக்கக்கூடும் என்பதால், புதிய, அறிமுகமில்லாத நபர்களுக்கு விற்பதில்லை. மொத்த விற்பனையாளர்களிடம் 10 முதல், 30 சரம் வரை வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள், பாக்கெட்டுக்கு, 30 முதல், 50 ரூபாய் என விலை வைத்து, விற்று லாபம் பார்க்கின்றனர். ஒரு பாக்கெட்டின் அடக்கவிலை, 15 முதல், 20 ரூபாய்; ஆனால், விற்பனை விலை, 80 முதல், 90 ரூபாய் வரை என மும்முடங்கு அதிகம்.

'கருப்பு ஆடு'

ஒரு பகுதிக்கு பான்மசாலா ரெய்டு மாநகராட்சி அதிகாரிகள் அல்லது போலீசார் உதவியுடன் நடக்கிறது என்றால், அதை துறையில் உள்ள 'கருப்பு ஆடு' மூலம் முன்கூட்டியே அறிந்து கொண்டு, அன்றைய தினம் கடைக்கு பூட்டு போட்டு, விடுமுறை விட்டு விடுகின்றனர். நகரில் பெருகி வரும் பான்மசாலா, குட்கா விற்பனையை தடுக்க, போலீஸ் கமிஷனர் அதிரடி காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி