உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ''தவறுதலாக, அதிகளவு துாக்க மாத்திரையை எடுத்துக்கொண்டதால் மயங்கி விழுந்தேன்; நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை,'' என, பிரபல பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக இருப்பவர் கல்பனா, 44. தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நிசாம்பத் நகரில் வசித்து வருகிறார். இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7q4s8r6j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து நேற்று முன்தினம் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு டாக்டர்கள், கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, கண் விழித்த கல்பனாவிடம், போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதில் அவர் கூறியதாவது: கடந்த 4ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஹைதராபாதுக்கு வந்தேன். துாக்கமின்மை காரணமாக, முதலில் எட்டு துாக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதைத்தொடர்ந்து, கூடுதலாக 10 துாக்க மாத்திரைகளை உட்கொண்டேன். டாக்டர் பரிந்துரைத்த அளவை விட, அதிக துாக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்ததால், வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பின்னணி பாடகி கல்பனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அவரது குடும்பத்தினர் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் உறுதி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 21:19

பாமரன் கனவுலயும் சாட்டையோட அண்ணாமலை வர்றாரோ ?? தூங்குறதே இல்ல போல .... உச் உச் உச் ..... பரிதாபம் ....


பாமரன்
மார் 06, 2025 23:29

யெஸ் யெஸ்... தூங்க போகும் போது காமெடி பார்ப்பது / அதை அசை போடுவது நல்லது... ரீசண்டா நடந்த அந்த காமெடிக்கு பகோடாஸ் கூட விழுந்து விழுந்து சிரிச்சாய்ங்கலாம்... வெளி காட்டிக்க முடியாததுதான் சோகம்...


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 21:17

நாலு இட்லி சாப்பிட்டேன் .... பசி அடங்கலை .... அதனால இன்னும் நாலு இட்லி சாப்பிட்டேன் .... இப்படித்தான் இருக்குது பேச்சு .....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 21:15

அதெப்படிங்கண்ணா சொல்லி வெச்சமாதிரி பல திரைப் பிரபலங்கள் இதே மாதிரி ஸ்டேட்மென்ட் கொடுக்குறாங்க ??


ஆதிகுடி கொற்கை
மார் 06, 2025 20:08

ஆடு திருடு போகல !!! திருடு போன மாதிரி கனா கண்டேன் !!!


பாமரன்
மார் 06, 2025 17:36

எனக்கென்னவோ நம்மாளு ஒருத்தர் பஞ்சு சாட்டையால் அடிச்சிக்கிட்டு டிங் டிங்னு டான்ஸ் ஆடுன காமெடி ஞாபகம் வருது... ம்ம்ம்ம்...என்னவா இருக்கும்?


Venugopal,S
மார் 06, 2025 18:50

அந்த சாட்டை யாலே பாமரனை நல்லா வெளுத்தா அது பஞ்சா இல்ல குஞ்சமான்னு தெரியும்.


ஈசன்
மார் 06, 2025 14:54

கயிறு தரமாக உள்ளதா என்று பார்க்க, தவறுதலாக தூக்கு போட்டுக்கொண்டேன், என்றும் கூட சொல்லலாம்.


M S RAGHUNATHAN
மார் 06, 2025 14:43

சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக அற்புதமான பாடகி. ஆனால் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பெண்மணியை மறைந்த SPB அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார். " இசை ராக்ஷசி" என்று கூறுவார். பன்மொழி பாடகி. ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ந்தவர்.


V SURESH
மார் 06, 2025 14:25

எந்த லூஸாவது 10 தூக்க மாத்திரைகள் சாப்பிடுமா. நம்பும்படியாக இல்லை விளக்கம்.


மால
மார் 06, 2025 10:57

எக்கேடு கெட்டால் என்ன


R Hariharan
மார் 06, 2025 10:00

இது நம்பும்படியாக இல்லை. ஸ்லீப்பிங் மாத்திரைக்கு ஒரு அளவு உண்டு. இது அவர்களுக்கு தெரியாத.


சமீபத்திய செய்தி