உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சென்னையில் தொடரும் சம்பவம்: பெயின்டரை முட்டிய மாடுகள் அரெஸ்ட்

சென்னையில் தொடரும் சம்பவம்: பெயின்டரை முட்டிய மாடுகள் அரெஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அடையாறு, கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 48. பெயின்டர். கடந்த 4ம் தேதி, இவரது வீட்டு முன் இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.சத்தம் போட்டு துரத்தியும் அவை நகராததால், அருகில் சென்று அவற்றை விரட்டினார். அதில் ஒரு மாடு ஆக்ரோஷமாக சிவகுமாரை முட்டி தள்ளியது. இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவும், உடலில் காயமும் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து, 173வது வார்டு சுகாதார அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான ஊழியர்கள், சண்டையிட்ட மாடுகள் குறித்து, அப்பகுதியினரிடம் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மாடுகள் என்பது தெரிந்தது. உடனே, இரண்டு மாடுகளையும் பிடிக்க முயன்றனர்.இதற்கு, ராஜ் மற்றும்அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களை அடிக்க பாய்ந்தனர்.இதையடுத்து, அடையாறு போலீசார் பாதுகாப்புடன், இரண்டு மாடுகளையும் சிறை பிடித்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மையத்தில் அடைத்தனர்.சிவகுமாருக்கு ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாட்டின் உரிமையாளர் ராஜிடம் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

எவர்கிங்
மார் 07, 2025 19:07

தெருவில் அலையும் வெறிநாய்களை ஒடுக்க திராணி இல்லாத நிர்வாகம்


kr
மார் 07, 2025 17:12

GCC is also acting like attai kathi in this issue. Why allow so many cattle in corporation limit roads and streets. Why is it so difficult to enforce such a small thing. Ask owners to keep cattle in their houses or GCC can public cattle sheds in all wards and ask cattle owners to keep their cattle there


aaruthirumalai
மார் 07, 2025 15:00

நல்லா வலியுறுத்தவும். வலிக்க கூடாது.


RAAJ68
மார் 07, 2025 11:13

நங்கநல்லூரில் வந்து பாருங்க மாடுகளின் அட்டகாசம் தாங்கல. ஆஞ்சநேயர் கோயில் வெளியே பெரிய பெரிய மாடுகள் வழியில் நின்று கொண்டு பக்தர்களை மிரட்டுகின்றன. பக்தர்கள் கொண்டு வரும் பிரசாதத்திற்காக எல்லாம் ரவுண்டு கட்டி நிற்கின்றன. அருகில் இருக்கும் கடைகளில் இருந்து அகத்திக் கீரை வாங்கி மாடுகளுக்கு போடுவதால் அவற்றை எதிர்பார்த்து வழியில் நின்று கொண்டு அட்டகாசம் செய்கின்றன. கார்ப்பரேஷன் ஊழியர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை கோவில் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. கோவில் அறநிலையத்துறை இடம் உள்ளது . அப்பவும் கூட இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயருக்கு எப்போதாவது மாடுகளை பிடிப்பது போன்று பாவனை காட்டுவதற்கு வாகனம் வரும் . எந்த மாட்டையும் பிடிக்க மாட்டார்கள். மாட்டுக்காரர்களுக்கும் அவர்களுக்கும் புரிதல் உள்ளன. ஏற்கனவே நங்கநல்லூரில் மாடுகள் முட்டி பலர் இறந்துள்ளனர் அப்பவும் கூட பாராமுகமாக உள்ளனர். இரண்டாவது பிரதான சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் வெளியே எப்பவும் மாடுகள் கூட்டம். பூக்கடைகளின் ஆக்கிரமிப்பில் பாதி சாலை காணாமல் போய்விட்டது மாடுகளின் உபத்திரம் வேறு. இது நங்கநல்லூர் அல்ல, நரக நல்லூர்.


naranam
மார் 07, 2025 09:25

மாடுகள்?


அப்பாவி
மார் 07, 2025 08:58

போட்டுத்தள்ளுங்க. அதாவது மாடுகளின் ஓனர்களை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை