உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுவர்கள் நம் வசமாகட்டும் தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி

சுவர்கள் நம் வசமாகட்டும் தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'அனைத்து பகுதிகளிலும், சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். சட்டசபை தேர்தல் வரை சுவர்கள் தங்கள் வசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.' என தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த போது, பல்வேறு அறிவுரைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அவற்றை நினைவூட்டும் விதமாகவும், அந்த அறிவுரைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கட்சி தலைமை அறிக்கை பெற்று வருகிறது.கூட்டத்தின் போது, தெரிவிக்கப்பட்ட வகையில், மாவட்ட பொதுக்குழு, நகர, பகுதி, கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அது குறித்த விவரங்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்சி தலைமையிலிருந்து இக்கூட்டத்தின் போது, தெரிவிக்கப்பட்ட சுவர் விளம்பரம் குறித்த அறிவுரை நினைவூட்டி அதன் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள தகவல்:

அனைத்து பகுதிகளிலும், கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். இதில் கட்சி மற்றும் அனைத்து சார்பு அணிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும். மற்ற கட்சியினர் சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மூலம் அவற்றை கைப்பற்ற வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள், கட்சி முப்பெரும் விழா என விளம்பரங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட வேண்டும். அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளம்பரங்கள் வாயிலாக மக்களை சென்றடைய வேண்டும். இது குறித்த போட்டோக்கள் தலைமைக்கு அனுப்ப வேண்டும். வரும் 2026 தேர்தலுக்கு இந்த விளம்பரங்கள் மிகுந்த உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
செப் 07, 2024 17:23

இது மாதிரி செவுத்துல எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது, தொண்டுக் கெழ்ச்ங்கள் பிறந்தநாள் கொண்டாடி பேரணி உஉவது நடக்கும் வர்சி இந்தியா எங்கேடா வல்லரசு ஆகப் போகுது?


karunamoorthi Karuna
செப் 07, 2024 08:56

சனாதனத்தை கொசு ஒழிப்பது போல் ஒழித்து கட்டுவோம் என்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்


karunamoorthi Karuna
செப் 07, 2024 08:54

குட்டி சுவர்கள் ஆகும்


SUBBU,MADURAI
செப் 07, 2024 10:34

திமுக தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை அதன் ஜாதகம் மற்றும் தலையெழுத்து அப்படி விதிக்கப் பட்டிருக்கிறது. என்னதான் சுவர் விளம்பரம் செய்தாலும் பிரயோஜனம் கிடையாது.


N Sasikumar Yadhav
செப் 07, 2024 08:23

ஆட்சியதிகாரம் கையில் இருப்பதால் ஆடக்கூடாது திருட்டு திராவிட மாடல் களவானிகளா ஆட்சி மாறட்டும் உங்களுக்கு இருக்கிறது கச்சேரி


Mani . V
செப் 07, 2024 07:29

சுவர்கள் நம் வசமாகட்டும். இல்லையென்றால் தகர்த்து எறிவோம்.


முக்கிய வீடியோ