உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பொதுக்குழு மற்றும் மாவட்ட மாநாடு, மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் நடந்தது.மாநாட்டில், 'சென்னை மாகாணமாக இருந்தபோது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்று பிராமணர்கள் 30 சதவீதம் பேர் இருந்தனர்; ஆனால், இன்று 3 சதவீதம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். 'சரியான எண்ணிக்கையை அறிய சமத்துவ சமுதாயம் உருவாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அவர்களை பாதுகாக்க, அங்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'விப்ர ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர், 'மகாரதி தொண்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''வாழ்க்கையில் பொய், ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. முறையாக வருமான வரி செலுத்த வேண்டும். அப்போது தான் நிம்மதியாக உறங்க முடியும்,'' என்றார்.ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசுகையில், ''பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வந்தால், அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும். ''பிராமணர் என்றாலே தமிழுக்கு வேண்டாதவர்கள் என்று சிலர் கூறி வைத்துள்ளனர். இது தவறு. உ.வே.சாமிநாதய்யர் இல்லையெனில், இன்று தமிழே இல்லை. ''பிராமணர்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள். ஆனால், இன்று ஆரியத்தை ஒழிப்போம் என்கின்றனர். ஆரியம் என்றால் உயர்ந்தவன், உத்தமமானவன் என்று தான் பொருள்,'' என்றார். ராம.சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

மக்கள் மனநிலையை

மாற்ற பா.ஜ., சவால்!மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ் போன்ற தலைவர்களின் கட்சிகள், தேசியத்தை மறுதலிக்கும் கட்சிகள் அல்ல. ஆனால், தமிழகத்தில் தி.மு.க., போன்ற கட்சிகள் தேசியத்தை நிபந்தனையுடன் ஏற்கும் கட்சிகளாகவே உள்ளன. மற்ற மாநிலங்களில் ஹிந்து மதம், ஹிந்துக்கள், தேசியம் மீது மற்ற மாநில கட்சிகளுக்கு கோபம் இல்லை. ஆனால், தி.மு.க., இவற்றை நிந்தனை செய்கிறது. இவ்வளவுக்கு பின்னும் லோக்சபா தேர்தலில் மக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து உள்ளனர். மக்கள் மனநிலையை மாற்ற, பா.ஜ., சவாலாக எடுத்து செயல்படுகிறது. தற்போது, சமூக, கல்வி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தியும், தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. அதை, 2026ல் ஆட்சி மாறியதும் அமல்படுத்துவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சமூக நல விரும்பி
செப் 02, 2024 08:09

ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து மக்களின் கணக்கெடுப்பு சேர்த்து எடுக்க வேண்டும். அப்போது தான் எல்லா தரப்பு மக்களும் பயன் பெறுவர்


GMM
செப் 02, 2024 07:42

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு மீண்டும் சென்னை மாகாணம் உருவாக்க வேண்டும். மொழி வாரி மாநிலம் உறவுமுறையை பிரித்து விட்டது. 100 சாதி 100 இடம். ஒரு சாதிக்கு ஒரு இடம். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால், தனி நபர் வரி வசூல் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். சாதிக்கு அளவுகோல் தேவை. திருமணம் 50 சதவீதம் மேல் அதே சாதியில் புரிந்து இருக்க வேண்டும். வாக்கு உரிமை பெற குறைந்த பட்ச ஆண்டு வரி கட்டாயம். மத இட ஒதுக்கீடு கூடாது. அல்லது சர்வதேச இட ஒதுக்கீடு திராவிடம் செயல் படுத்த வேண்டும்.


அப்புசாமி
செப் 02, 2024 06:49

முதல்ல எத்தனை ஜாதி இருக்குன்னு கணக்கெடுக்கணும். அதுவே சில கோடி தேறும். பிராமணர்களுக்குள் சில நூறு வகைகள் தேறும்.


Indhiyan
செப் 02, 2024 06:06

ஜாதிவாரி கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டுக்குத்தான். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், எந்த எந்த ஜாதியில் எத்தனை குடும்பங்கள் இட ஒதுக்கீட்டினால் பயன் அடைந்தன எனவும் கணக்கெடுக்க வேண்டும். அப்போதுதான் கீழ்மட்டத்தில் இருக்கும் ஜாதிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க முடியும் . இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு பெற்றவ்ர்களே மீண்டும் மீண்டும் ஒதுக்கீடு பெற்று, வேண்டிய அடிமட்டத்தில் உள்ளவர்கள் மேலே வரவே முடியாது. அது சமூக நீதி இல்லை. எனவே, வெறும் ஜாதிவாரி கணக்கும் மட்டும் போதாது.


Kasimani Baskaran
செப் 02, 2024 05:33

ஒரு நாடு நாசமாகவேண்டும் என்றால் முதலில் தகுதியில்லாதவர்களை பதவியில் அமர்த்த வேண்டும். அதுவும் 50% என்பது கூட பிதுக்கப்பட்டதால், நசுக்கப்பட்டதால் என்று ஏற்றுக்கொள்ளலாம் - ஆனால் பாதிக்கு மேல் கூட தகுதிக்கு இடமில்லை என்றால் உருப்பட வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த அரை நூற்றாண்டாக இந்தியாவின் வளங்களை வைத்து படித்து முன்னேற வாய்ப்பில்லை என்ற விரக்தியில் தகுதியுள்ளவர்கள் இந்தியாவை விட்டு ஓடித்தான் போகிறார்கள்.


Sivaprakasam Chinnayan
செப் 03, 2024 19:02

எல்லா இனத்திலும் தகுதி உடையவர்கள் இருக்கிறார்கள் அதே போல் தர்த்திகளும் இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை