உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்தி கற்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடம்

ஹிந்தி கற்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்தி பிரசார சபா வாயிலாக, ஹிந்தி பாட தேர்வுகளை எழுதியதில், தென் மாநிலங்களிலேயே, தமிழகம் முன்னிலையில் உள்ளது.மத்திய அரசு, ஹிந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை கூடுதல் அலுவல் மொழியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், குழந்தை பருவத்தில் இருந்தே ஹிந்தி மொழியை கற்பிக்கும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், தமிழகம், ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதுடன், இரு மொழி கொள்கையையும் கடைப்பிடிப்பதால், புதிய தேசிய கல்வி திட்டத்தை ஏற்கவில்லை. இதனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி, மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழகத்துக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை.இந்நிலையில், சென்னையில் உள்ள தக் ஷின் பாரத் - ஹிந்தி பிரசார சபா சார்பில், இந்தாண்டு, பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில், எட்டு ஹிந்தி பாடங்களுக்கு நடந்த தேர்வுகளில், சென்னையில் இருந்து 1 லட்சத்து, 16,611 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 3 லட்சத்து, 54,655 பேர் பங்கேற்றுள்ளனர்.அதேபோல, ஆந்திராவில், 1 லட்சத்து, 4,959 பேரும், கர்நாடகாவில், 5,584 பேரும், கேரளாவில், 8,452 பேரும் தேர்வெழுதி உள்ளனர். இதில், தென் மாநிலங்களிலேயே அதிக மாணவர்கள் ஹிந்தி பாட தேர்வெழுதிய மாநிலமாக, தமிழகம் உள்ளது. இதன் வாயிலாக, தமிழக மாணவர்களிடம் ஹிந்தி படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதை அறிய முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

xyzabc
செப் 01, 2024 23:00

இந்தியா முழுவதும் திராவிட மாடல் தேவை. ஹா ஹா


Ashokan Ramalingam
செப் 01, 2024 20:47

விருப்ப பட்டு படிக்கிறவங்க சரி. விருப்ப படலனாலும் தனியார் பள்ளிகளில் இந்தி சொல்லி தருவது சரியா விருப்பப்பட்டால் உம் படிக்க முடியவில்லையே அது சரியா. முதலில் நான் ஏன் இந்தி பிரசார சபால போய் இந்தி தேர்வு எழுதனும். உண்மையான இந்தி எதிர்ப்புனா தனியார் பள்ளிகளிலும் இந்தி இருக்க கூடாது அது சமத்துவம் சமூக நீதி


Vasudeva
செப் 01, 2024 10:00

நம் நாடு இந்தியா,அதன் பிரதான ஆட்சி மொழி ஹிந்தி,மத்திய அரசு வேலை வாய்ப்பு பெறவும்,உயர் கல்வி பயிலவும் ஹிந்தி தெரிந்திருந்தால் நல்லது,வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் வியாபார போக்குவரத்துக்கு ஹிந்தி அவசியம்,இப்படி பல நன்மைகள் இருக்கும் போது அதனின் பலனை வருங்கால தலைமுறைகள் பெறும் வகையில் ஹிந்தி கற்பது நல்லது


venugopal s
ஆக 31, 2024 18:00

பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஹிந்தியை பள்ளி கல்லூரியில் பதினைந்து வருடங்கள் படிப்பது அவசியமற்றது. யாருக்கு அவசியமோ அவர்கள் ஹிந்தி பிரசார சபா மூலம் தனியாகப் படித்து கற்றுக் கொள்ளட்டும்!


venugopal s
ஆக 31, 2024 18:00

பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஹிந்தியை பள்ளி கல்லூரியில் பதினைந்து வருடங்கள் படிப்பது அவசியமற்றது. யாருக்கு அவசியமோ அவர்கள் ஹிந்தி பிரசார சபா மூலம் தனியாகப் படித்து கற்றுக் கொள்ளட்டும்!


venugopal s
ஆக 31, 2024 18:00

பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஹிந்தியை பள்ளி கல்லூரியில் பதினைந்து வருடங்கள் படிப்பது அவசியமற்றது. யாருக்கு அவசியமோ அவர்கள் ஹிந்தி பிரசார சபா மூலம் தனியாகப் படித்து கற்றுக் கொள்ளட்டும்!


ஆரூர் ரங்
ஆக 31, 2024 16:52

ஹிந்தியையும் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்ப்பது ஆளும் கட்சி ஆட்களின் கல்வி வியாபாரத்தை காப்பாற்றவே. தமிழில் துவக்ககல்வி கட்டாயம் என்றானால் கான்வென்ட்கள் மூலம் மதமாற்றம் கஷ்டமாகிவிடும்.


P.Sekaran
ஆக 31, 2024 16:49

எப்பொழுது ஒரு மாநிலத்தில் ஒரு மொழியை எதிர்கிறார்களோ அந்த மாநிலதில் மறைமுகமாக அந்த மொழிக்கு ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம். எப்பொழுது ஒருவரை எதிர்க்கிறார்களோ அவர் வளர்கிறார் என்று அர்த்தம். திருட்டு திராவிட ஆட்சி அதில் விதிவிலக்கல்ல


T.sthivinayagam
ஆக 31, 2024 14:50

உயர் படிப்புக்கு உதவாத ஹிந்தியை பேச தெரிந்தால் போதும் நம்ம மத்திய நிதி அமைச்சரை போல ஆங்கிலம் பேச ஆங்கிலம் படிப்பது நல்லது என மக்கள் கூறுகின்றனர்


ஆரூர் ரங்
ஆக 31, 2024 16:48

எந்த மக்கள்? குடிமக்களா? அவர்கள்தானே அதிகம்?


Sendan
ஆக 31, 2024 12:28

படிப்பது நல்லது தானே.நிறைய பேர் ஹிந்தி படிக்கிறார்கள் என்றால் நிறைய பேற்கு இன்னும் ஹிந்தி அறிவு இல்லை என்று பொருள்.


முக்கிய வீடியோ