உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, தி.மு.க.,வில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.தி.மு.க., - எம்.பி.,க்கள் சண்முகம், வில்சன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., சந்திரசேகரன் ஆகிய, ஆறு எம்.பி.,க்களின் பதவிக் காலம், வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது. அப்பதவிகளுக்கு, ஜூன் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் உறுதியாக கிடைக்கும். அதில், ஒரு எம்.பி., பதவி, ம.நீ,ம., கட்சி தலைவர் கமலுக்கு வழங்கப்பட உள்ளது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உடல் நலம் கருதியும், லோக்சபாவில் அவரது மகன் துரை எம்.பி.,யாக இருப்பதாலும், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி தர வாய்ப்பில்லை என, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போதைய எம்.பி.,க்கள் அப்துல்லா, சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவதால், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மற்றொரு எம்.பி., வில்சன், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் நடத்தப்படும் வழக்குகளில் ஆஜராகி வருவதால், அவரது பதவி நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவரை தவிர, மீதமுள்ள மூன்று எம்.பி., பதவிகளை பெற, ஆளும் தி.மு.க.,வில் கடும் போட்டி காணப்படுகிறது. வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயங்களைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, அச்சமுதாய நிர்வாகிகள் சிலர், தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இளைஞர் அணி, மகளிரணி, மருத்துவ அணி நிர்வாகிகளும் அப்பதவியை பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு மத்தியில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர், எம்.பி., பதவி கேட்டு துணை முதல்வர் உதயநிதியிடம் கடிதம் கொடுத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian
பிப் 22, 2025 17:18

மய்யம் கட்சி தலைவர் நிலை இலவு காத்த கிளி ஆகிவிடுமோ? சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன், என்று சொல்லத்தான் சில நாட்கள் முன்னர் துணை முதல்வர் அவரை சந்தித்தாரோ?


Sridhar
பிப் 22, 2025 13:48

எப்படியாவது கோமாளி அங்கு செல்வதை நிறுத்தினால் சரி.


அப்பாவி
பிப் 22, 2025 06:52

சும்மாவா? வெறுமனே போய் நாற்காலியை தேச்சிட்டு மாசம் 2 லட்சம் வாங்கலாமே... ராஜ்யசபான்னாலே வேஸ்ட் கூட்டம். ஒண்ணும் நடக்காது. துணை ஜனாதிபதிக்கும் பொழுது போகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை