உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையிலுள்ள தொழிற்சாலைகள், ஓட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பேசுவதை கேட்க சகிக்க முடியவில்லை. மரியாதை தமிழுக்கு பெயர் போன நம் கோவையில், அவர்களுக்கும் தமிழில் தெளிவாக பேச, சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து ள்ளது, கோவை மாவட்ட நிர்வாகம்.தமிழகத்தில் அதிக அளவிலான புலம் பெயர் தொழிலாளர்களை கொண்ட மாவட்டங்கள் வரிசையில், கோவை மாவட்டம் இரண்டாவது இடம் வகிக்கிறது. கோவை மாவட்ட தொழிலாளர்துறை கணக்குப்படி, சுமார் 10,00,000 வட மாநில புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.பணியிடத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்க, புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். மொழி தெரியாததால் பணிபுரியும் இடத்தில் குளறுபடிகள் ஏற்படுகின்றன.மரியாதை பேச்சு இல்லைஅதோடு, பிறரிடம் பேசும் போது மரியாதையுடன் எப்படி பேசவேண்டும் என்பது தெரியாமல், புழக்கத்திலுள்ள சில தேவையற்ற வார்த்தைகளை, தெரியாமல் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் பலரும் கோபமடைந்து, பிரச்னைகள் ஏற்படுகின்றன.சரியான புரிதல் ஏற்படுவதற்கும், பிரச்னைகளை களைவதற்கும் பணிபுரியும் இடத்தில் சூழலை முழுமையாக புரிந்து கொள்வதற்கு, தமிழில் சரளமாக பேச வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கோவை கலெக்டர் கிராந்திகுமார், வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழில் பேச்சு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.அதற்காக, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவையின் கீழ் செயல்படும் தமிழ் இணையகல்விக்கழகம், இந்தி மொழி வாயிலாக, பேச்சுத் தமிழ் பயிற்சியை வழங்குகிறது. இது, தமிழக தமிழ் பரப்புரைக் கழகத்தின் கீழ், கோவையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவர்.கலெக்டர் ஆலோசனைஇந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சேர்ந்த மேலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து, கலெக்டர் சிறப்புக்கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினார்.அதில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குனர் காந்தி, தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்), காயத்ரி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:கோவையில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், எளிதாக தமிழில் பேச வேண்டும். அவர்களுக்குள் சரியான புரிதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான், அவர்கள் செய்யும் பணி எளிமையாகும். தகவல் தொடர்பு சுலபமாகும். உற்பத்தியில் பாதிப்பு வராது. இப்பயிற்சி, விரைவில் அந்தந்த தொழிற்சாலை வளாகங்களிலேயே, பணி நேரம் அல்லாத நேரத்தில் இணைய வழியில் நடைபெறும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramar P P
செப் 01, 2024 18:07

ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை.படித்து வட மாநிலங்களில் வேலைக்கு செல்ல முயலும் தமிழர்களுக்கு இரு மொழிக் கொள்கை.


Jagan (Proud Sangi)
ஆக 26, 2024 23:58

அங்கு வெளி ஆட்களிடம்/கஸ்டமர்களிடம் மரியாதையாக பேசும் வழக்கம் கிடையாது வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் தான் மரியாதை மட்டு எல்லாம்


Mr Krish Tamilnadu
ஆக 26, 2024 23:35

நீங்க எந்த ஊரு சார். இந்தி பேசுபவர்களை இங்க இறக்கி, இன்னும் ஜந்து வருடத்தில் ரேஷன் கார்டு,, ஒட்டார் ஜ.டி. எல்லாம் கொடுத்து, அந்த தொகுதியை ஜெயிக்க உதவி செய்யுகிறீர்களா?. நடக்காது சார். இங்க உள்ளவர்களுக்கு அங்க உள்ள தொழில்சாலைகளில் வேலையை வாங்கி தந்து இகோல் பண்ணுங்க பார்ப்போம். இறக்குமதி ஏற்றுமதியும் அப்படி தான். எவ்வளவு இறக்குமதி பண்ணுகிறோமோ அதே அளவு எதையாவது அவங்களுக்கு அனுப்பனும் சார். அப்ப தான் சமமா இருக்கும்.


ஸ்ரீ
ஆக 26, 2024 20:42

அப்படியே தமிழனுக்கும் இந்தி கன்றுக்குட்டி நல்லது


jeyakumar
ஆக 26, 2024 17:28

நாய் வாந்தி எடுத்தத நாய் தான் தின்னும் , காலம் பதில் சொல்லும் ஆளுறவன் இப்படி இருந்தா நம்ம சாதாரண மக்கள் என்ன செய்யமுடியும்..இப்படி கதை கட்டுரை வடிவில் சொல்லத்தான் முடியும் ..ஒட்டு பிச்சை யெடுத்தவனுக்கு இருக்கற மரியாதை ஒட்டு பிச்சை போட்ட மக்களுக்கு இந்த மதம் தான் பரிசு .


Ram pollachi
ஆக 26, 2024 13:28

தொழில் முனைவோர்களுக்கு இந்தி மொழியை கற்றுக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.. இவர்களை அழைத்து வரும் தரகர்கள் ஒரே இடத்தில் பணிபுரிய விடமாட்டார்கள் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.... இரயிலில் வந்தால் தாமதமாகும் என்று விமானத்தில் கூட்டிட்டு வருகிறார்கள். இனி தென் மாவட்ட மக்களை நம்பி பிரயோசனம் இல்லை சனிக்கிழமை கூலியை வாங்கி சரக்கை போட்டால் செவ்வாய் கிழமை தான் தெளியும் நிலை...


தமிழ்வேள்
ஆக 26, 2024 10:27

வேண்டாத வேலை.....கோவையை விட்டு வேறுபக்கம் போனால் டயலெக்ட் வேறுபடும்.. தமிழகத்தில் 14 விதமாக தமிழ் பேசப்படுகிறது.. தனித்தனியாக டிரெயினிங் கொடுக்கவா முடியும்? கோவை தமிழை சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்தில் பேசினால் கிண்டல் செய்வார்களே.. அதற்கு என்ன செய்யலாம்?..


Iniyan
ஆக 26, 2024 07:35

இவர்களில் பெரும்பாலோர் வங்க தேசத்தை சேர்த்தவர்கள். இவர்களை நன்றாக சோதித்து நாடு கடத்த வேண்டும் இல்லையேல் இங்கும் ஒரு பாகிஸ்தான் உருவாகும்


vadivelu
ஆக 26, 2024 06:46

அவிங்க சுலபமாக தமிழ கற்று கொள்வார்கள், வார்த்தைகளில் மரியாதை கம்மியாகத்தான் இருக்கும் வங்க மொழி பேசுவோரிடம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை