உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிக கட்டணத்தால் ஆர்வமில்லா பயணியர்: குமரியில் வீணாகும் சுற்றுலா படகுகள்

அதிக கட்டணத்தால் ஆர்வமில்லா பயணியர்: குமரியில் வீணாகும் சுற்றுலா படகுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: அதிக கட்டணத்தால் சுற்றுலா பயணியருக்கு ஆர்வமில்லாமல், கன்னியாகுமரியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு படகுகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு, பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 10 கோடி ரூபாய் செலவில் தாமிர பரணி, திருவள்ளுவர் என்ற இரண்டு அதிநவீன சொகுசு படகுகளை பூம்புகார் போக்குவரத்து கழகம் வாங்கியது.

350 ரூபாய் கட்டணம்

ஆனால் இவை சாதாரண படகுகளை போல அல்லாமல், சற்று நீளமாக உள்ளதால் விவேகானந்தர் பாறையில் இவற்றை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது.இதனால் சின்னமுட்டம் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. பின், கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை படகுகளை இயக்க முடிவு செய்து, கடந்த மே மாதம் துவங்கி வைக்கப்பட்டது.இதற்காக நபர் ஒன்றுக்கு, 'ஏசி 'வசதியுடன் 450, சாதாரண இருக்கைக்கு 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதிக கட்டணம் காரணமாக சுற்றுலாப் பயணியர், இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இந்த படகு சென்று வந்தது. தற்போது கன்னியாகுமரி படகு துறையில் இந்த இரண்டு படகுகளும் கட்டி போடப்பட்டுள்ளன.

காற்றால் பாதிப்பு

கடல் உப்புக் காற்றின் தாக்கத்தால், அவை சிறிது, சிறிதாக அழிந்து கொண்டிருக்கின்றன.கட்டணத்தை குறைத்து வட்டக்கோட்டைக்கு இந்த படகுகளை இயக்கும் பட்சத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணியர் வருவர் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுபற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று, பூம்புகார் போக்குவரத்து கழக நிர்வாகம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SUBRAMANIAN P
ஆக 30, 2024 15:56

அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதியா ஒசீ படகு சவாரி கொடுப்போம்னு சொல்லச்சொல்லுங்க. வெற்றி உறுதி


Dhandapani
ஆக 30, 2024 13:41

வணக்கம் தினமலர் தேசிய தமிழ் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு சுற்றுலா என்பது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகவும் அதில் ஆன்மிகம் கலந்து செல்வது விதமாகவும் அமையப்பெற்றது பல ஊர்களிலிருந்தும் ஒரு சிறிய பட்ஜெட்டை ஏற்படுத்திக் கொண்டு நடுத்தர மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் இங்கு வந்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி செலவை ஏற்படுகின்றது போட்டிங் என்பது அரசு சார்ந்து இயக்கப்படுகிறது இந்த அரசாணது அனைவருக்கும் ஏதுவாக கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் அதிக கட்டணம் வசூலித்தால் இதில் யாரும் பயணம் செய்ய விரும்ப மாட்டார்கள் மேலும் பல கோடி ரூபாயில் கப்பல்களை தயாரித்தாலும் அதில் யாரும் பயணம் செய்யாமல் இருந்தால் அக்கப்பலை தயாரித்தும் வீண் தான் அதனால் அரசு இந்தக் கட்டணத்தை தளர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நன்றி வணக்கம் நான் திண்டுக்கல்லில் இருந்து கே எம் தண்டபாணி ஆச்சாரியார்


அப்பாவி
ஆக 30, 2024 07:36

ஓசீல குடுத்தா கூட்டம் அலை மோதும். அப்படியே பழகிட்டோம்.


முக்கிய வீடியோ