உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் பளிச்

எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் பளிச்

கோவை: புதிய கல்வி கொள்கை வலியுறுத்தும், 'மூன்றாவது மொழி வேண்டுமா வேண்டாமா' என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடமே கேட்டு விட்டோம். அத்தனை பேரும் கேட்கிறார்கள், 'மூன்றாவதாக ஒரு மொழி கற்பதில் என்ன தவறு இருக்கிறது' என்று!டி.பிரியதர்ஷிகா, தனியார் கல்லுாரி: இது அவரவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு தேவை எனில், மூன்றாவது மொழியை கற்றுக்கொள்வர். அதில் எந்த தவறும் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=napbq5uq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எச்.சக்தி, தனியார் கல்லுாரி: ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளலாம். அதை கட்டாயம் கற்க வேண்டும் என்பது தேவையில்லை. வேண்டும் என்றால் அவர்களே கற்றுக்கொள்வர்.எ.அபிநயா, தனியார் கல்லுாரி: வெளிநாடு செல்வோருக்கு அந்நாட்டின் மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதுபோன்ற சூழலில், -மூன்றாவது மொழி அவசியமாகிறது. ஆகவே மூன்றாவது ஒரு மொழியை கற்பது தவறில்லை.வி.அக்சய், தனியார் கல்லுாரி: இன்று உலகளாவிய போட்டியை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். அப்படி இருக்கையில், தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் தவறில்லை.ஆர்.ரிஷி, தனியார் கல்லுாரி: எனது சொந்த ஊர் கேரளா. அங்கு நான் பள்ளியில் படிக்கும் மூன்றாவது மொழியாக தமிழை கற்றேன். தற்போது கோவையில் படிக்கிறேன். அங்கு நான் தமிழ் கற்றதால் தற்போது இங்கு என்னால் எளிதாக அனைத்து சூழ்நிலையையும் சமாளிக்க முடிகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும், மூன்றாவது மொழி மிகவும் இன்றியமையாத ஒன்று.எஸ்.பிரியதர்ஷினி, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். தமிழகத்தின் வெளியே எங்காவது செல்லும் போது, யாரையும் சார்ந்து இருக்க முடியாது. குறிப்பாக வெளியூர்களுக்கு பணிக்காக செல்லும் போது, மூன்றாவது மொழி அவசியம் தேவை.எம்.வாணிஸ்ரீ, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி என்பது அவசியமே. இன்று, அனைவருக்கும் வெளிநாட்டு கனவு உள்ளது. வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது, பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மூன்றாவது மொழி தெரியாவிட்டால் வாய்ப்பு கைநழுவிப்போகும். இதைத்தவிர்க்க மூன்றாவது மொழி கற்பது முக்கியம்.நா.உதயநிலா, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அம்மொழி குறித்த அறிவு வளரும். அதன் வாயிலாக அந்த மொழி பேசும் இடத்துக்கு செல்லும் போது, பல விதங்களில் சாதிக்கலாம்.எ.எம்.ஜெயபிரியா, அரசு கலைக் கல்லுாரி: அனைவரும் மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் மற்றவர்களுடன் போட்டியிட முடியும். பல பகுதிகளுக்கு செல்லும் போது நிலைமையை எளிதில் சமாளிக்க முடியும். எந்த ஒரு சூழலிலும் வெற்றி பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Arulgandhi Perumal
மார் 20, 2025 23:54

மூன்றாவது மொழி ஹிந்தி கட்டாயம் போதிக்கப்படவேண்டும். இரண்டு மொழி தோல்வி அடைந்துவிட்டது DMK லாபம் அடைந்துள்ளது மக்கள் குறிப்பாக பட்டியல் இந மக்கள் ஹிந்தி டீச்சர்ஸ் போஸ்டுக்கு 58 ஆண்டுகளாக வாய்ப்பை இழந்துவிட்டனர்


Subash BV
மார் 20, 2025 15:40

WAIT AND WATCH. LICENCE FOR ALL THESE PRIVATE INSTITUTIONS WILL GET CANCELLED. ALSO WATCH STALIN THE UNPATRIOTIC GUY.


Anushya Prince
மார் 16, 2025 18:13

இங்க பிரச்சனை மூன்றாவது மொழி வேண்டுமா வேண்டாமா என்பதில்லை. உனக்கு விருப்பம் இருந்தா நீ எத்தனை மொழியும் கத்துக்கலாம். ஆனா கண்டிப்பா எல்லோரும் படிக்கணும் ன்னு ஏன் கட்டாயப்படுத்தனும் கட்டாயப்படுத்த கூடாது என்பது தான் எங்கள் கருத்து. திணிக்க வேண்டாம்.


A P J S
மார் 16, 2025 10:11

தமிழ்நாடு சங்கிகள் போல் இன துரோகிகளை வேறு எந்த மாநிலத்திலும் இனத்திலும் பார்க்க முடியாது பஞ்சாப் சங்கிகள் பள்ளிகளில் பஞ்சாப் மொழி முக்கியம் என்கிறார்கள் மராத்திய மொழி பயின்றால் தான் அரசு வேலையில் முன்னுரிமை என்கிறார் சங்கி முதல்வர் இந்தியாவில் எந்த மாநிலத்தின் நிதி, மொழி, கலாச்சாரம், பண்பாடு என அம்மாநில மக்களோடு நிற்பதில்லை என்றாலும் எதிராக நிற்பதில்லை தமிழ்நாடு சங்கிகள் தவிர


ramani
மார் 15, 2025 19:54

மும்மொழி கற்றுக் கொண்டால் மாணவர்கள் உருப்பட்டு விடுவார்கள். அது தவறு. மாணவர்கள் உருபட கூடாது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும்


Sakthi G
மார் 15, 2025 07:13

இந்தியாவின் செம்மொழி, உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழியை ஏன் அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக கொண்டு வர கூடாது.


ramani
மார் 15, 2025 19:52

இங்கு ஹிந்தி கொண்டு வாங்க அப்புறம் தானாகவே அங்கு தமிழ் வரும்


arasiyal kelvi tv
மார் 15, 2025 00:10

மூன்றாவது மொழி அவசியமில்லை


arasiyal kelvi tv
மார் 15, 2025 00:09

உலக அளவில் பேசும் ஆங்கிலம் மொழி போன்று மூன்றாவது மொழிஅமைந்தால் நன்று மாநிலத்திற்குள் இருக்கும் மூன்றாவது மொழி அவசியமில்லை


arasiyal kelvi tv
மார் 15, 2025 00:04

மூன்றாவது மொழியாக மழையாளம் கற்றுக்கொண்டு பீகார் மும்பை டெல்லி போன்ற மாநிலத்தில் மழையாளம் பேசி சாதிக்க முடியுமா மூன்றாவது மொழி என்பது உலக அளவில் பேசும் மொழியாக இருந்தால் சரி உதாரணமாக சொல்கிறேன் உலக மொழி ஆங்கிலம் அதுபோன்று மொழியாக இருந்தால் அம்மொழியை பயில்வது தவறல்ல இங்கே கற்று கொடுப்பது மாநில மொழி அதனால் என்ன பயன் நான் தமிழை படித்துக்கொண்டு பீகாரில் தமிழ் பேசினால் அவர்களுக்கு புரியுமா எனவே மூன்றாவது மொழி அவரவர் விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்ளட்டும் கட்டாய படுத்த கூடாது


SP Ããñtø
மார் 14, 2025 21:10

அதான் ஆங்கிலம் இருக்கே அப்புறம் எதுக்கு ஹிந்தி , வெளிநாடு போயிட்டு யாரு ஹிந்தி பேச போறா , எல்லாம் ஆங்கிலம் தான்.வடக்கன ஆங்கிலம் பேச சொல்லுங்க.


முக்கிய வீடியோ