உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்

தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணையில் திறக்கப்படும் நீரில், தினமும் 10 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் மணல் குவாரிகளை அமைத்து மணல் கொள்ளையில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது; கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உள்புகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தி.மு.க., அரசு இனியாவது தடுப்பணைகளை கட்டி, காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 29, 2025 08:24

இப்படி நிஜத்தை பேசினால் சாங்கி என்று கூறும் கூட்டம் தமிழகத்தில் பெருகி விட்டது


புதிய வீடியோ