உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியலில் நுாற்றுக்கு நுாறு மார்க்: முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியலில் நுாற்றுக்கு நுாறு மார்க்: முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், கணினி பயன்பாடு பாடத்தில் 4,208 பேர்; வேதியியலில் 3,181; கணிதத்தில் 3,022; இயற்பியலில் 1,125; கணினி அறிவியலில் 9,536 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.அறிவியல் பிரிவில், 96.99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, மற்ற பாடப்பிரிவுகளை விட மிக அதிகம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e3t1u3pv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில், ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தவறு நடக்காமல், இவ்வளவு மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவது இயலாத காரியம் என்பது ஆசிரியர்களின் கருத்து.

கடும் மன உளைச்சல்

இதுபோல, எந்தெந்த மாவட்டங்களில், எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம், அரசு மாதிரி பள்ளியில், 101 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் ஆறு பேர், வேதியியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேசமயம், செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர்; அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17; செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35; அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 11.அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14; சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 என, மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களில், 167 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.இதுதவிர 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த தேர்வு மையத்தில், ஒரு தனியார் பள்ளி அறிவியல் பிரிவு மாணவர்கள், 148 பேர் தேர்வு எழுதி உள்ளனர். அவர்களில், 91 பேர் வேதியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மற்றொரு தனியார் பள்ளியில், 11 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று உள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை. இந்த முறை, மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நன்றாகப் படித்து, தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வியில் அரசியல் புகுந்து விட்டது. அரசியல்வாதிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும்படி, கலெக்டரிடம் சிபாரிசு செய்கின்றனர்.

தரமான கல்வி வேண்டும்

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கூறி, காப்பி அடிக்க உதவி செய்கின்றனர். இதனால், கல்வியின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்துவது தான் தீர்வாக இருக்கும்.மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து, தங்களின் ஆட்சியில், கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதாக பெருமை பேசுவதை தவிர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Subbaiah Murugan
மே 14, 2025 19:18

நூறு சதவிகிதம் தவறு நடந்துள்ளது. ஆதலால் இந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களை மறுபடியும் தேர்வு எழுத செய்ய வேண்டும்.


sethusubramaniam
மே 12, 2025 23:23

நீட் தேர்வு முறைகேட்டுக்காக நீட் ஐ ரத்து செய்யக் கோரும் ஜாலராக்கள் , பிளஸ் 2 தேர்வையும் ரத்து செய்ய கூவுறாங்களான்னு பார்க்கணும்.


Saai Sundharamurthy AVK
மே 12, 2025 22:49

அதென்ன குறிப்பாக வேதியியல் பாடத்தில் தேர்வு எழுதிய ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் 100 க்கு 100 மதிப்பெண்கள்! எப்படி ??? அதிலும் குறிப்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இவ்வளவு பேர் ? கட்டாயம் பழைய புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.


Kamalesan Perumal
மே 12, 2025 22:17

அடப்பாவி மக்களே அந்த பள்ளி ஆசிரியர் மனம் எவ்வளவு துயரப்படும் அவர்கள் தியாகத்தை இப்படியா இழிவு படுத்துவது ?


vbs manian
மே 12, 2025 17:54

ஆல் பாஸ் போல் இதுவும் ஒரு பெரிய முறைகேடு. ஆங்கிலத்தில் கூட நூற்றுக்கு நூறு வாங்குகிறார்கள். இதுவும் ஒரு இலவச படையல் போல் தெரிகிறது. எங்கோ மிகப்பெரிய தவறு நடக்கிறது. மாணவ அறிவு திறனுக்கு ஏற்ற பிரதிபலிப்பு இல்லை. இப்படி மதிப்பெண் வாங்கி குவிக்கும் மாணவர் ஏன் அகில இந்தியா தேர்வுகளில் சோபிக்க முடியவில்லை. எல்லாம் கானல் நீர். கழகம் வழக்கம் போல் இந்தியாவிலேயே தமிழ் மாணவர் போல் இல்லை என்று அரசு மார் தட்டிக்கொள்ளும்.


S.Srinivasan
மே 12, 2025 16:20

ஸ்டிக்கர் மையம்


S.Srinivasan
மே 12, 2025 16:18

காப்பி பரம்பரை உருவாகிறது


கோவிந்தா
மே 12, 2025 14:00

இந்த முறை வேதியியல் தேர்வு சற்று கடினமும் கூட.... கல்வி அதிகாரிகள்.. அரசியல் வாதிகள்..... ஆசிரியர்கள் இந்த தில்லுமுல்லுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும்.. வட மாவட்டங்களில் உண்மையான தேர்வு முடிவுகள் 60% ஐ தாண்டாது..... ஏனெனில் இங்கு ஆசிரியர் சங்கங்கள் வலுவான வை....


RAAJ68
மே 12, 2025 13:51

மாணவர்களின் படிப்பு திறன் தரம் மற்றும் எதிர்காலம் பற்றி அரசுக்கு கவலை இல்லை. எங்கள் மாநிலத்தில் இவ்வளவு மாணவர்கள் தேறினார்கள் என்று பொய்யான பிம்பத்தை உருவாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை குட்டி சுவராக்கி தங்கள் ஆட்சிக்கு நல்ல பெயர் வேண்டும் அவ்வளவுதான் இவர்களின் நோக்கம் மாணவ சமுதாயம் வீணாகி போகட்டும் அவ்வளவுதான்


V GOPALAN
மே 12, 2025 13:23

All IT companies in Tamilnadu mostly Andgra and Mumbai based students are getting job because their state syllabus is equal to Cbse and knowledge is more. They can face aby exam like Neet.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை