உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!

அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வெளிநாடுகளில் இருந்து வரும் சிறிய பார்சல்களுக்கான வரி விலக்கை ரத்து செய்து உள்ள நிலையில், புதிய வரி குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்காததால், அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை, 25 நாடுகள் நிறுத்தியுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறையை கடைபிடிக்கும் நாடுகளுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுக்கு வரும், 800 டாலர்களுக்கு உட்பட்ட சிறிய பார்சல்களுக்கு வரி விலக்கு இருந்தது.அந்த வரி விலக்கு நாளை முதல் ரத்து செய்யப் படுகிறது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், எவ்வளவு வரி என்பதை வெளியிடவில்லை. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாடு களுக்கு விதித்துள்ள அதே அளவுக்கு, பார்சல்களுக்கும் வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.இது பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை அமெரிக்கா வெளியிடவில்லை. மேலும், பார்சல்களுக்கான வரி எப்படி வசூலிக்கப்படும் என்பதிலும் தெளிவில்லை. இதன் காரணமாக இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட 25 நாடுகள் அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை நிறுத்தியுள்ளதாக, ஐ.நா.,வின் சர்வதேச தபால் யூனியன் கூறியுள்ளது. அதே சமயம் 100 டாலருக்கு குறைவான மதிப்புடைய பரிசு பொருட்கள் அனுப்ப அமெரிக்கா வரி விதிப்பதில்லை. எனவே அந்த சேவை மட்டும் தொடருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தஞ்சை மன்னர்
ஆக 29, 2025 16:31

அவர் அவர் நாட்டையும் எதிர்காலத்தில் அதிபர் பதவி போனாலும் தன்னுடைய தொழில் பாதிக்கத்தவண்ணம் ஏற்பாடு செயகிறார் என்று மட்டும் தெரிகிறது இது அமெரிக்கா மக்களுக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை


சாமானியன்
ஆக 29, 2025 06:31

ஈ.மெயில் வாயிலாக போட்டோ, வீடியோ மட்டுமே அமெரிக்காவிற்கு அனுப்ப முடியும். பொருட்களை அனுப்ப முடியாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிப்பித்தர். பார்த்தாலே எரிச்சலா இருக்கு. தினமும் ஒரு பஞ்சாயத்து.


Rameshmoorthy
ஆக 28, 2025 12:47

Soon under Trump government , America will be separated from the world, people Of America also will start leaving the country


Nada raja
ஆக 28, 2025 12:24

அமெரிக்கா ரொம்ப ஓவராக தான் செல்கிறது...


சமீபத்திய செய்தி