வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Lord Ganesha, please bless us all.
சட்டாரா: மஹாராஷ்ட்டிராவில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனத்திற்கு ஆற்றங்கரைக்கு தலையில் சுமந்து செல்லும் பக்தர் வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆக.27 ல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றார் போல் உரிய நாட்களில் நதி மற்றும் குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. மஹாராஷ்ட்டிராவில் இந்த விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வாடிக்கை. மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கணபதி விசர்ஜனம் பல தனித்துவமான மரபுகளைக் காணலாம்.இங்குள்ள சட்டாரா என்ற மாவட்டத்தில் கணேச உத்சவம் வெறும் பத்து நாள் விழா மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பக்தியின் தனித்துவமான கலவையாகும்.இங்குள்ள ஒரு பக்தர் ஆண்டுதோறும் விநாயகர் சிலையை தலையில் சுமந்து ஆடியபடி நதியை நோக்கி செல்வார். எவ்வளவு வேகமாக ஆடினாலும் சிலை என்றுமே கீழே விழாது. இது தெய்வீக செயல் என்று இப்பகுதியினர் கூறுகின்றனர். இவர் செல்லும் போது பல மக்கள் அவருடன் சென்று பக்தி பரவசமாக விநாயகர் சிலை விசர்ஜனம் செய்தனர்.
Lord Ganesha, please bless us all.