உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு ஆஸ்பத்திரியில் கண்புரை ஆப்பரேஷன் செய்த பெண்ணுக்கு பார்வை போன பரிதாபம்

அரசு ஆஸ்பத்திரியில் கண்புரை ஆப்பரேஷன் செய்த பெண்ணுக்கு பார்வை போன பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி:அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மனைவி மாரியம்மாள், 57; கூலித்தொழிலாளி. கண் பிரச்னை காரணமாக அவர், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.கண்புரை இருப்பதாக கூறிய டாக்டர் சரவண வித்யா, ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து, ஜூலை 22ல் ஒரு கண்ணிலும், 24ம் தேதி மறு கண்ணிலும் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மறுநாள் மாரியம்மாளை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அறுவை சிகிச்சை செய்த பின், இரு கண்களிலும் முற்றிலுமாக பார்வை போனதை உணர்ந்த மாரியம்மாள், 28ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சென்று கூறியுள்ளார். பரிசோதித்த டாக்டர் சரவண வித்யா, ஐந்து நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி, உள்நோயாளி பிரிவில் அனுமதித்து உள்ளார்.திடீரென அவரை, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரை கூறி, 'அங்கு சென்று சிகிச்சை பெறுங்கள்; முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என, அங்குள்ள டாக்டர்கள் கூறியதால் மாரியம்மாள், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.மாரியம்மாள் மகள் மகேஸ்வரி கூறியதாவது: கண் கருவிழி பகுதியில் சில பிரச்னை இருப்பதால், அதை சரி செய்வதற்கான நவீன இயந்திரங்கள் தனியார் மருத்துவமனையில் தான் உள்ளன என டாக்டர்கள் கூறினர். உடனடியாக அங்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகள், அதற்கான செலவுகள் அனைத்தையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என கூறினர்.இரு கண்களிலும் பார்வையை இழந்து என் தாய் தவித்து வருகிறார். ஆனால், டாக்டர்கள் அலட்சியமாக, தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். எங்களை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, மாரியம்மாள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Maruthu Pandi
ஜூலை 31, 2025 15:16

மதுரை , சுற்று மாவட்டங்களின் மிக பெரிய வரம் அரவிந் கண் இலவச மருத்துவமனை . பயனடயுங்க...


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 19:46

கோவில்பட்டியிலேயே அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளது.


Maruthu Pandi
ஜூலை 31, 2025 15:13

ஏம்மா அதற்குத்தான் மதுரை அண்ணாநகரில் அரவிந் இலவச கண் மருத்துவமனை இருக்கே ஏழை எளியோர்களுக்காக ... கோயில் பட்டியில் இருந்து மதுரை போக கூட முடியலயாம்மா ?


Kjp
ஜூலை 31, 2025 14:55

அதனால்தான் அரசியல் விஐபிகள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு ஓடி விடுகிறார்கள். என்ன மாசு சரிதானே.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 14:46

இது மருத்துவர்களின் கவனக்குறைவு என்று சொன்னால் அமைச்சர் சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்து, இது மருத்துவர்களின் அதிக பணிச்சுமையால் நேர்ந்த தவறு என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவார் பாருங்க.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 13:48

ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் முறையாக நீட் தேர்வு எழுதி மருத்துவர்கள் ஆனார்களா, அல்லது அரசியல் செல்வாக்கில் அல்லது லஞ்சம் கொடுத்து அல்லது ஜாதி அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று மருத்துவர்கள் ஆனார்களா? இனியும் அவர்கள் அந்தப்பணியில் தொடர்வது மிக மிக ஆபத்து மற்ற பிணியாளர்களுக்கு.


இந்தியராஜ்
ஜூலை 31, 2025 13:44

கவனக் குறைவு தான் மருத்துவமனையில்


உ.பி
ஜூலை 31, 2025 13:33

ஆக இதுதான் திராவிட மாடல்


c.mohanraj raj
ஜூலை 31, 2025 13:18

மா சுப்பிரமணியம் ஆகிய அவர் என்ன இதற்கு விளக்கம் சொல்ல போகிறார்


c.mohanraj raj
ஜூலை 31, 2025 13:18

அதுதான் ஊருக்கு ஊர் இலவசமாக அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்து விடுகிறார்கள் திராவிட மாடலை நம்பி போனால் கண் போனது தான் மிச்சம்


selva kppk
ஜூலை 31, 2025 13:17

உன் சாதி வன்மம் அழிய என்ன செய்யலாம்? திருந்தாத ஜென்மம்


சமீபத்திய செய்தி