உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  சட்டசபையில் கவனமாக செயல்படணும்: எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

 சட்டசபையில் கவனமாக செயல்படணும்: எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

- நமது நிருபர் - 'சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கவனமாக செயல்பட வேண்டும்,' என, தி.மு.க., - எம்.எல்.ஏ,க்களுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கான 'வாட்ஸாப் குரூப்'பில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சில உத்தரவுகளை பதிவிட்டுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் பட்ஜெட், வரும் ஆக.,5ல் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களையே, பெயர் மாற்றி, தொடர்ந்து செயல்படுத்த, த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய்; ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள்; பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், பட்டுச் சேலை; கல்விக் கடன் 20 லட்சம் ரூபாய்; குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு; வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் போன்ற, த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள், பட்ஜெட்டில் இடம் பெறாவிட்டால், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்த வேண்டும். பட்ஜெட் கூட்ட தொடர், நேரலை செய்யப்பட உள்ளதால், தி.மு.க., அரசின் திட்டங்களை பட்டியலிட்டு, சட்டசபையில் பேச வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பாலியல் புகார்கள், போலீசார் தாக்குதலில் மரணம் போன்ற தொடர்பான விவகாரங்களில், த.வெ.க., அரசின் நிர்வாக திறமையின்மையை சுட்டிக்காட்டி விவாதிக்க வேண்டும். பட்ஜெட்டுக்கு பின், அதில் உள்ள குறைகளை, மக்களிடம் விரிவாக பேச வேண்டும். மேலும், சட்டசபையில் கவனமான செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அன்பே சிவம்
ஜூலை 24, 2026 16:54

சட்டசபைக்கு இனிமேல் உள்ளே போக முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி?


பைரவன்
ஜூலை 24, 2026 14:14

அதெல்லாம் சரி உங்களின் முக்கிய இலக்கான சனாதனக் கொசு ஒழிப்பு போராட்டத்தை எப்போது திராவிஷ ரவுடிகள் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.


நண்பேன்டா
ஜூலை 24, 2026 13:26

இம்மாதிரி குளோசப் புகைப்படத்தை போடாதீர்கள். பயமாக இருக்கிறது.


shyamnats
ஜூலை 24, 2026 10:53

சட்ட சபையில் ஒரு நல்ல முதல்வராக கவனமாக செயல் பட்டிருந்தால் , மக்கள் ஏன் தூக்கி வீசியிருக்க போகிறார்கள் ? பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவும், மைனாரிட்டிகளை திருப்தி படுத்தவும், சந்தோச படுத்தவும் மட்டும் செய்ததாலும் அரசு நிர்வாகம் செயல் படாமல் இருந்ததாலும்தான் மக்கள் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். ஊருக்கு மட்டும் உபதேசம் கவைக்கு உதவாது.


அப்பாவி
ஜூலை 24, 2026 06:59

பனியன் யாருக்கு?


raja
ஜூலை 24, 2026 06:55

ஆமா ரொம்ப கவனமா செயல் படனும் .. புறங்கை நக்க வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிட கூடாது....அதில் ஒன்கொள் கோவால் புற குடும்பத்துக்கு பங்கு தர மறந்து விட கூடாது....


A viswanathan
ஜூலை 24, 2026 14:06

ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ஆட்சியில் இருந்தபோது அடக்கி வாசித்திருக்க வேண்டும். ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது ஏதாவது விமர்சனம் செய்தால் கேஸ் போடுவது. நீங்களே உங்களுக்கு ஆப்பு வைத்து விட்டீர்கள்.