உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சொத்து ரூ. 170 கோடி

பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சொத்து ரூ. 170 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் தனது 87வது வயதில் காலமானார். இவர் 150 கோடிக்கு மேல் சினிமா மூலம் சொத்துக்களை சேர்த்துள்ளார். புகழ்பெற்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் மனோஜ் குமார் உயிரிழந்தார். மனோஜ் குமாரின் மறைவு ஒரு சகாப்தம் என்கிறது பாலிவுட். பிரதமர் நரேந்திர மோடி முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோஜ் குமார் தனது திரையுலக வாழ்க்கையில் பல சிறந்த படங்களை தயாரித்துள்ளார்.

தேசபக்தி படங்கள்

மனோஜ் குமாரின் உண்மையான பெயர் ஹரிகிருஷ்ண கிரி கோஸ்வாமி. மனோஜ் குமார் என்ற பெயரில் பிரபலமானார். அவரது தேசபக்தி படங்களால், அவர் பரத் குமார் என்று அழைக்கப்பட்டார். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டி வந்தன.செலிபிரிட்டி நெட் வொர்த் அறிக்கையின்படி மனோஜ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.170 கோடி ஆகும். நீண்டகால சினிமா வெற்றியின் வழியாகவே இந்த வருமானம் பெருகியது. கோஸ்வாமி டவர் என்ற பெயரில் ஒரு பெரிய கட்டிடம் மனோஜ் குமார் பெயரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மனோஜ் குமாருக்கு 1992ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ரொட்டி, கப்பாடா மற்றும் மகான் ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். 2015ல், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
ஏப் 04, 2025 20:29

ஏன் அவருடைய சொத்து மதிப்பை வெளியிடவேண்டும்?


Columbus
ஏப் 04, 2025 16:53

He was a popular actot / director. His films include Roti Kapada aur Makaan, Shor, Upkaar, Kranti, Haryali aur Raasta, Himalay ke Godh mein, Jai Jawan Jai Kisan, Purab aur Paschim, Pathar ke sanam, Woh kaun thi, Sanyasi, Clerk, etc. MGR's Pudhiya Bhoomi was a remake of Himalay ke Godh mein.


Venkatesan R
ஏப் 04, 2025 14:19

கோலிவுட்டில் ஒரு மனோஜ் [பாரதிராஜா] பாலிவுட்டிலும் ஒரு மனோஜ் [குமார் ] இயற்கை எய்தி விட்டனர்.


Sampath Kumar
ஏப் 04, 2025 13:01

பேரு கோஸ்ஸாமி அதான் நம்ம அய்யா ஜி போய்ட்டாரு போல


V Venkatachalam
ஏப் 04, 2025 17:15

சம்போத்து நீயும் உன் பேரை கோஸ்வாமி ன்னு மாத்திக்கோ..உனக்கும் நீ சொல்ற ஜி வருவார்.


Jayaraman Rangapathy
ஏப் 04, 2025 12:58

தேச பக்தி வளர்ததில் இவருக்கு முக்கிய பங்கு.


Jayaraman Rangapathy
ஏப் 04, 2025 12:56

Excellent actor


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை