உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., மீண்டும் மலரும்: பழக்கதோஷத்தில் ஓ.பி.எஸ்.,

அ.தி.மு.க., மீண்டும் மலரும்: பழக்கதோஷத்தில் ஓ.பி.எஸ்.,

சென்னை: 'ஒன்றிணைந்த அ.தி.மு.க., விரைவில் உருவாகும்' என, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.ஓ.பி.எஸ்.,: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த அ.தி.மு.க., மீண்டும் மலரும். (என்னது மீண்டும் மலருமா? பா.ஜ., கூட்டணியில இருக்கறதால, பழக்க தோஷத்தில் அ.தி.மு.க., மலரும்னு சொல்லிட்டீங்களா?). உறுதியாக அனைவரும் இணைகிற காலம் வெகு துாரத்தில் இல்லை. சசிகலா: அ.தி.மு.க., இணைவதற்கு சாதகமான நிலை உள்ளது. மக்களுக்காக நான் பேசுகிறேன்; அ.தி.மு.க., ஒருங்கிணைக்கப்படும். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். மக்கள் நிம்மதியாக இருக்க, ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். சட்டசபை தேர்தலில் ஒன்றிணைந்த அ.தி.மு.க.,வை பார்ப்பீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நவயுக நாடகம்'

'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் கேட்டுள்ளாரே' என்ற கேள்விக்கு, ஓ.பி.எஸ்., அளித்த பதிலில், ''தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்தும் நவயுக நாடத்திற்கு பதில் கூற முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Akrmn
செப் 18, 2024 13:48

இனி ஒரு காலமும் ஒன்றினை அதற்கு சாத்தியமில்லை எடப்பாடியையும், பன்னீரை யும் ஓரம் கட்டிவிட்டு பிஜெபி சங்கிகளின் சுவாசத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு மற்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து நின்றால் ஒரு வேளை தொண்டர்களும் ஏற்றுக்கொண்டால் வாய்ப்பு உண்டு இல்லையெனில் சங்கிகள் எதிர்கட்சியாகி விடுவார்கள்


குமரி குருவி
செப் 18, 2024 10:46

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.ஜெ..க்கு பின் மறைந்து போகும்..தளர்ந்து போகும்