உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு; அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு; அமைச்சர் சுப்பிரமணியன் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 'உலகளாவிய ஆயுர்வேத புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்' என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன், 150 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு நுாலை வெளியிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ துறைகள், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில், ஆயுர்வேதா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இதில், 3.5 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.ஆயுர்வேத துறையில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, ரசசாஸ்திரம், திரவியகுணம் என்ற இரண்டு பாடப்பிரிவுகளின் கீழ், ஐந்து இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பதை பாராட்டுகிறேன்.மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன; மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே, அ.தி.மு.க., ஆட்சியில் செய்தது, தி.மு.க., ஆட்சியில் செய்தது என, இரண்டையும் ஒப்பீடு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishna
அக் 26, 2024 11:43

MASU ROMBA TIRED.DEC 2024 CHENNAI MAZHAI VELLATHIL ORU SOTTU KOODA THANEER THENGAADHA SAADHANAI.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 26, 2024 10:45

அண்ணே இர்பான் கைது விவகாரம் ஞாபகம் இருக்கா? அதைப்பத்தி எதுவும் பேசிடாதீங்க, அதுவும் இன்னொரு வேங்கை வயல் சந்து பாலாஜி தம்பி அசோக் விவகாரம் மாதிரி காத்துலேயே கரையட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை