உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முத்த மழை பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,

முத்த மழை பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: தக் லைப் படத்தில் இடம் பெற்ற 'முத்த மழை' பாடலை, 'பொலிட்டிக்கல் வெர்ஷனாக' மாற்றி, அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.கமல், சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான தக் லைப் படத்தில், 'முத்த மழை' பாடல் பிரபலமானது. இந்த பாடலை, தி.மு.க., அரசை விமர்சிக்கும் வரிகளுடன், பொலிட்டிக்கல் வெர்ஷனாக மாற்றி, அ.தி.மு.க.,வினர் வெளியிட்டு, சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, வாட்ஸாப் எண்களில் 'ஸ்டேட்டஸ்' ஆக வைத்து வருகின்றனர்.அதில்,'மூக்க ஸ்டாலின் ஆட்சி முடிஞ்சி போகாதோ...மொத்த பெண்களுக்கும், 'சேப்டி' வாராதோ...ஊடகம் உண்மை மறுக்கும் - அதுஉண்மைகளை சொல்ல மறுக்கும்கஞ்சா இரவோ, கள்ள இரவோஎல்லாம் ஒருவனின் சொல்லாத தொழிலோஇன்னும் வரும் உந்தன் கதை...'என பாடல் வரிகள் நீள்கின்றன.இதையடுத்து, அ.தி.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுக்க, தி.மு.க.,வினர் சினிமா பாடல்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

madhesh varan
ஜூன் 17, 2025 11:06

பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த உடன் இவனுங்களுக்கு எப்படி எரித்துப்பாருங்க? போன ஆட்சில பொள்ளாச்சில நடந்த கற்பழிப்பு, மசாஜ் சென்டர், எல்லாம் அதிமுக காரனுங்க சம்பாரிச்சானுங்க


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 11:52

சாரை மறக்கவே முடியாது சார். மாற்றான் தோட்டத்து மல்லிகைன்னா அண்ணாவின் சீடர்களுக்கு குஷிதான்.


Oviya Vijay
ஜூன் 17, 2025 09:59

இந்த பாடலின் உட்கருத்து என்னவெனில் திமுகவைப் பார்த்து அதிமுக கூட்டணியினர் சொல்வது போல... இதுநாள் வரை நீங்கள் கொள்ளையடித்தது போதும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவாகிய நாங்களும் கொள்ளையடிக்க வேண்டும். அதனால் நீங்கள் விலகிச் செல்லுங்கள் என்பது தான்... தாங்கள் ஏதோ மக்கள் ஆச்சர்யப்படும் வகையில் நேர்மையான ஆட்சியை தரப் போகிறோம் என சொல்லும் வகையில் இவர்கள் எல்லாம் புனிதர்களா என்ன??? ஏற்கனவே இவர்களது லட்சணத்தை தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்...


vivek
ஜூன் 17, 2025 10:46

அய்யோ இந்த ஆர்டிஸ்ட் நடுநடுவுலே வந்து காமெடி பண்ணுதே ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை