உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பங்கு' என கூறி, தி.மு.க., ஆதரவு கட்சிகளுக்கு த.வெ.க., அழைப்பு விடுத்து வரும் நிலையில், கூட்டணி உடையாமல் இருக்க, கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும் நிலை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=irpfkmh0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி, 159 இடங்களை கைப்பற்றியது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் கூடுதலாக சேர்ந்துள்ளது. ஆட்சியில் பங்கு இந்த தேர்தலில், தி.மு.க.,வை எதிர்த்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளதால், கடும் போட்டியை, தி.மு.க., சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, தி.மு.க.,வுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தி.மு.க.,விடம் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, 'ஆட்சியில் பங்கு' என த.வெ.க., தரப்பில் துாது விடப்பட்டு உள்ளது; திரைமறைவில் பேச்சும் நடத்தப்பட்டு உள் ளது. இந்த தகவல் தி.மு.க., மேலிடத்திற்கு தெரியவந்ததால், கூட்டணி உடையாமல் இருக்க, கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் போட்டியிடவும், கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்யவும் தி.மு.க., தயாராகி உள்ளது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த தேர்தலை போல, 173 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட வாய்ப்பு இல்லை. கமல் கட்சி கூட, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளும், விஜய் கட்சியை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. காங்கிரஸ், 125 தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ளது. அதில், 60 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதேபோல், 25 தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் விரும்புகிறார். 130க்கும் குறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய செயலராக நியமிக்கப்பட்ட வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சண்முகம் ஆகியோர் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், தலா 10 தொகுதிகளில் போட்டியிட்டு, கட்சியை வலுப்படுத்த விரும்புகின்றனர். ம.தி.மு.க.,வுக்கு தனிச்சின்னம் கிடைத்திருப்பதால், 12 தொகுதிகளில் போட்டியிட பட்டியல் தயார் செய்து வருகிறார், அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை. வரும் தேர்தலில் அதிக தொகுதிகளை, கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதால், அதை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி செய்தால், 130க்கும் குறைவான தொகுதிகளிலேயே தி.மு.க., போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து, தி.மு.க., தலைமை குழப்பம் அடைந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
செப் 26, 2025 00:53

குழப்பம் எதற்கு ஒவ்வொரு கண்டைனர் ஒருவருக்கு என்று திறந்து விட்டால் பல் இளித்து கொண்டு பிச்சை எது கொடுத்தாலும் சரின்னுட்டு பிளாஸ்டிக் சேர் கூட வேண்டாம்னு கிளே சப்பனும் பொஆட்டுக்கிட்டு ஆண்டை எது சொன்னாலும் சரிங்கனு போயிடலாம்.


Ragupathy
செப் 25, 2025 22:32

எப்படி இருந்தாலும் திருட்டு திராவிடம் 10 தொகுதி வெல்வதே கடினம்...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 25, 2025 19:58

விடியலுக்கு தெரியும் தனியா நின்னா பாதிக்கு மேல டெபாசிட் கெடைக்காதுன்னு,ஆக கேட்டது கிடைக்கும்


raj
செப் 25, 2025 19:52

அதிமுக தவெக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது அது தான் நடக்க போகிறது அப்படி அமையும் பொழுது vck, மற்றும் கம்யூனிஸ்ட் மதிமுக மற்றும் mdmK சேர வாய்ப்பு உள்ளது. எடப்பாடி இந்த வருடம் முடிவதற்குள் எதாவது சொத்தை காரணம் சொல்லி பிஜேபி யை கழற்றி விட போகிறார்.இது தெரிந்தே நாகேந்திரன் அவர்களுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்.


Ravi Kumar
செப் 25, 2025 19:24

தனித்தனியா நின்னு உங்கள் பலத்தை காட்டுங்கள் .. கட்சி என்றால் தனியாக நிற்க வேண்டும்.இல்லையென்றால் மூடிவிட்டு போங்கள் ...... ஊரை, மக்களை, ஜனநாயகத்தை மதியுங்கள் .....


மாபாதகன்
செப் 25, 2025 14:34

காங்கிரஸ் 20 விசிக 12, மதிமுக , இரண்டு கம்யூனிஸ்ட் தலா 6 மொத்தம் 18 , மேநீ மை ,கொங்கு ஈஸ்வரன், தாவாக ,இஸ்லாமிய காட்சிகள் தலா 2 மொத்தம் 8 இன்னும் இரண்டு உதிரி காட்சிகள் ஒன்று இரண்டு என மொத்தம் அறுபது தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி விட்டு 174 தொகுதிகளில் திமுக போட்டியிட்டால் தனித்து 144 தொகுதிகளில் வெல்லும்.


krishna
செப் 25, 2025 17:02

MAAPADHAGAN SUPER BOLI PEYAR CORRECTAA SET AAGUM.200 ROOVAA AGILA ULAGA KEVALA OOPIS CLUBUKKU VANDHULLA PUDHIYA VARAVU.VAAZHTHUKKAL.


Haja Kuthubdeen
செப் 25, 2025 18:56

அறிவாலய கணக்கு காங்கிரஸ் 8 வலது 3 இடது 3விசி 3. திமுக 2 முஸ்லிம்கள் 2 கமல் மத்த உதிரிகள் 3...திமுக 210தொகுதியில் போட்டியிட்டா 208 தொகுதியில் வெற்றி...கூட்டணி கட்சிகள் ஒத்துவரலன்னா 234லிலும் போட்டியிட்டு 230 தொகுதியிலும் வெற்றி...


ஆரூர் ரங்
செப் 25, 2025 14:20

தைரியம் இருந்தால் இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கலாம். 4 ஆண்டுகள் நல்லாட்சியை கொடுத்திருந்தால் கூட்டணியே தேவைப்பட்டிருக்காதே.


மாபாதகன்
செப் 26, 2025 11:17

பத்து ஆண்டு மோடி நல்லாட்சி நடத்தவில்லையா?? ஏன் நடப்பதே கூட்டணி ஆட்சிதான்??


Balasubramanian
செப் 25, 2025 14:01

காங்கிரஸ் 60 விசிக 25 கம்யூனிஸ்ட் 20 மய்யம் 10 தேமுதிமுக 20 மதிமுக 5 எஞ்சிய தொகுதியில் திமுக போட்டி இட்டால் வெற்றி நிச்சயம்! கூட்டணி ஆட்சியும் நிச்சயம்! இதை தலைவருக்கு எடுத்து சொல்லுங்கள்


ديفيد رافائيل
செப் 25, 2025 13:23

DMK க்கு தைரியமிருந்தா 2026 தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஜெயிக்கட்டுமே......


Mario
செப் 25, 2025 13:13

இருக்கிற கூட்டணி பிரியலாம்.. அதிமுக கடம்பூர் ராஜூ பேச்சால் பரபரப்பு.. பாஜகவிற்கு கல்தாவா?