உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அமெரிக்க பயணி கைது

கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அமெரிக்க பயணி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை செல்ல முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி லுாசிபரை, 42, போலீசார் கைது செய்தனர்.அமெரிக்கா மிசிசிபியை சேர்ந்த லுாசிபர், 42. சிவபக்தரான இவர் சுற்றுலா விசாவில் பிப்., 17ல் உ.பி., பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார். இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களை தரிசித்த லுாசிபர் மார்ச் 24ல் தனுஷ்கோடி வந்து ராமர் கட்டிய பாலத்தை காண செல்வதாக கூறி கடலில் நீந்த துவங்கினார். மரைன் போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் திரிந்த இவரை போலீசார் விசாரித்தனர். இதில் லுாசிபர் விசா முடிந்ததால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.இதனால் கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. லுாசிபரை தனுஷ்கோடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kulandai kannan
மார் 31, 2025 17:29

வை. கோபால்சாமியிடம் ஐடியா கேட்டிருக்கலாம்.


naranam
மார் 31, 2025 13:57

இவருக்கு கை காலில் விலங்கு உண்டா?


Ramesh Sargam
மார் 31, 2025 12:01

ஒரு அமெரிக்கருக்கு தன்னுடைய விசா என்றைக்கு காலாவதி ஆகும் என்று கூட தெரியாதா? அதற்குள் ஊர் திரும்பவேண்டும் என்று தோன்றவில்லையா?


பெரிய ராசு
மார் 31, 2025 11:54

அமெரிக்காவில் இருந்து ஒரு போன் வந்தால் ராஜமரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்


முக்கிய வீடியோ