உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஏழைகள் உயர வழிவகுப்பதால் ஆங்கிலத்தை எதிர்க்கிறார் அமித்ஷா: அமைச்சர் மகேஷ்

ஏழைகள் உயர வழிவகுப்பதால் ஆங்கிலத்தை எதிர்க்கிறார் அமித்ஷா: அமைச்சர் மகேஷ்

சென்னை : ஏழைகள் உயர வழிவகுப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்தை எதிர்ப்பதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:ஆங்கிலத்தை இனியும் காலனிய எச்சம் என்று கூற முடியாது. அது, உலகளவில் முன்னேற்றத்துக்கான கருவியாகி விட்டது. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள்கூட, ஆங்கிலத்தை கற்பிக்கின்றன.

வளர்ச்சிக்கு அவசியம்

காலனிய மயக்கத்தால் அல்ல, அறிவியல், தொழில்நுட்பம், வணிகத்தில் முன்னணி வகிப்பதற்காக ஆங்கிலம் கற்கின்றனர். மிக வலுவான தேசிய பெருமிதம் உடைய சீனா கூட, ஆங்கிலமானது வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதுகிறது.ஆனால், இங்கே அமித் ஷாவும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஆங்கிலத்தை மேட்டிமைத்தன அடையாளமாக காட்டுகின்றனர். ஏழைகள், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர ஆங்கிலம் வழிவகுக்கிறது என்பதால், அதை எதிர்க்கின்றனர். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததை போல, இப்போது வெகுமக்களுக்கு, ஆங்கிலம் எட்டாக்கனியாக இருக்க வேண்டும் என்று, அவர்கள் விரும்புகின்றனர். இது, மொழியைப் பற்றியது அல்ல; அதிகாரம் பற்றியது.

அஞ்சி நடுங்குவது ஏன்?

தி.மு.க.,வை பொறுத்தவரை, தமிழ் எங்கள் அடையாளம், ஆங்கிலம் வாய்ப்புகளுக்கான வாயிற்கதவு. அதனால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டும் கற்கக் கிடைக்கிறது. மொழி ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, அது தடையாக இருக்கக்கூடாது.அமித் ஷா அஞ்சி நடுங்குவது ஆங்கிலத்தைக் கண்டல்ல; சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் கண்டே, அவர் அஞ்சுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:25

ஏழைகள் உயர வழிவகுப்பதால் இந்தியை எதிர்க்கிறார் ஸ்டாலின் ..இது ஓகே வா ?


Matt P
ஜூன் 23, 2025 19:02

விஷால் என்ற நடிகர் சொல்லியிருந்தார். இவரும் விஷாலும் பள்ளி காலங்களில் குயின் இங்கிலீஷில் British தான் பேசி கொள்வார்களாம். கொஞ்சம் பேசுங்க பார்ப்போம்


Matt P
ஜூன் 23, 2025 18:57

வட நாட்டில் இங்கிலீஷு படிச்சு தான் எல்லோரும் உயர்ந்த மாதிரி தெரியலை. அமித்ஸாவுக்கே இங்கிலீஷு சரியா தெரியுமா என்பது தெரியலை. காமராஜ் இங்கிலீஷு படிச்சுட்டா இந்தியா முழுதும் பெயர் பெற்றார். ஜெயில்சிங் என்று குடியரசு தலைவர் இருந்தார்.அவருக்கும் இங்கிலீஷு தெரியாதாம். காமராஜரும் ஜெயில்சிங்கும் பக்கத்தில் இருந்து பேசி கொண்டார்களாம். மொழி தடையல்ல. மொழிக்கு நீங்கள் போடுவது தான் தடை. இவரு பிள்ளையே பிரெஞ்சு படிச்சு தான் உயர போவுது. தமிழ் நாட்டில் யாரும் எந்த மொழியையும் எதிர்ப்பதாக தெரியவில்லை. இவங்க கட்சி தீ நா மூநா கானா தான் ஒரு இந்திய மொழியை எதிரியாக பார்க்கிறது. இந்த தொழில் நுட்ப உலகத்தில் யார் உதவியுமின்றி படிக்க முயற்சித்தால் அளவு கடந்து படிக்கலாம் என்பது உறுதி. இலவசங்களை தவிர்த்து மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள். இந்தியா மொழிவதும் எல்லோரும் தேவையான மொழியை கற்று கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமே அறிவை வளர்க்க தடை. பிள்ளைகளை விருப்பப்படி படிக்கவிட்டால் குற்றங்கள் குறையும். சிந்தனை சிதறி njaana சேகரங்கள் உருவாகக மாட்டார்கள். என்ன?. கட்சிகளுக்கு குண்டர்கள் பஞ்சம் ஏற்பட்டு விடும்.


kumar
ஜூன் 23, 2025 00:34

என்ன சொல்றே , பொய் மாகேசு ராஜா? தமிழால் ஏழைகள் உயர வாய்ப்பில்லை ன்னா? ஐயோ , நம்ம தமிழ் தானை தலைவர்கள் எல்லாம் கொதிக்கவில்லையா ? அப்பா ஏழைகள் எல்லாம் எளிதாக ஆங்கிலம் படிக்க வசதி செஞ்சுட்டீங்களா ? கழக தலைவர்கள், உடன் பிறப்புகள் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் ஏழைகளுக்கு இலவச குறைந்த கட்டணத்தில் லஞ்சம் வாங்காமல் அனுமதி உண்டா ?


Matt P
ஜூன் 23, 2025 19:07

கருணாநிதியே தமிழால் தான் உயர்ந்தார். ஸ்டாலின் உதயநிதி தமிழரசு மு க முத்து செல்வி எல்லோரும் தான். ஸ்டாலீனுக்கும் உதயநிதிக்கும் இங்கிலீஷா மந்திரி பதவி கொடுத்தது ? எப்போ இங்கிலீஷு ல எழுதினாவ பேசினாவ எழ்தினாவ?


venugopal s
ஜூன் 22, 2025 22:39

பாஜகவினர் முதலில் ஆங்கிலத்தை ஒழித்து விட்டு பிறகு மற்ற ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் அல்லாத இந்திய மொழிகளை ஒழிக்க நினைப்பவர்கள். அதிலும் தமிழை ஒழிக்க வேண்டி எந்த எல்லைக்கும் செல்லும் தமிழ் துரோகிகள்!


Matt P
ஜூன் 23, 2025 19:09

யார் விரும்பினாலும் தமிழ் ஒழிந்து விடாது. அது தமிழின் தனித்தன்மை.


சிந்தனை
ஜூன் 22, 2025 22:07

ஆங்கிலத்தில் 100க்கும் மேல் இருக்கின்றன. ஒரு ஆங்கிலம் தெரிந்தவருக்கு இன்னொரு ஆங்கிலம் புரியாது. அதுதான் உண்மை நிலை. அது இங்கிருக்கும் தற்குறிகளுக்கு தெரியாது. அதே சமயம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பொது மொழி இருந்து விட்டால் உலகிலேயே பெரிய மொழி அதுவாகத்தான் இருக்கும். நாம் கொள்ளையடிக்க வந்தவனின் மொழியை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. உலகம் நமது மொழியை ஏற்க வேண்டும்


சிந்தனை
ஜூன் 22, 2025 22:03

சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது பொய்!


theruvasagan
ஜூன் 22, 2025 21:30

எதையும் படிக்காமலேயே தற்குறிகள் எல்லாம் தலைவனாக இருக்கிறார்களே. அது எப்படி.


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 15:11

கல்லூரியில் MA ஆங்கிலம் படித்தவர்கள் எத்தனை பேர் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்? ஒரு சதவீத ஆசிரியர்களுக்கு கூட சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது. அட தமிழ் கூட பிழையின்றி உச்சரிக்க வராது. இவரு யாருக்கு உபதேசம் செய்கிறார்?


அப்பாவி
ஜூன் 22, 2025 13:19

அந்நிய நாட்டு மொழி இருக்கலாம் இந்திய மொழிகள் இருக்க கூடாதா அமைச்சரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை