உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., அமைச்சரவையில் அன்புமணி முதல்வர்: சித்திரை மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலகல

பா.ம.க., அமைச்சரவையில் அன்புமணி முதல்வர்: சித்திரை மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலகல

திண்டிவனம் : மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என கட்சியினர் கூறியதால் பரபரப்பு நிலவியது.மாமல்லபுரத்தில் வரும் மே 11ம் தேதி, வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், திண்டிவனத்தில் நேற்று நடந்தது.

நாமே போடுவோம்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கட்சியின் தலைவராக அன்புமணி பதவியேற்ற பின், மாமல்லபுரத்தில் நடைபெறும் முதல் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் என்பதால், கட்சி நிர்வாகிகள் அன்புமணியை, வருங்கால தமிழகம், வருங்கால முதல்வர் என வாழ்த்தி பேசினர்.கட்சியின் கவுரவ தலைவர் மணி பேசுகையில், 'வன்னியர் சங்க மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்பர். வரும் 2026ல் ஆட்சி மாற்றம் வருவதற்கும், ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கும், கூட்டணி ஆட்சி தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாநாடாக இருக்கும்.அன்புமணி, வருங்கால முதல்வர் ஆவதற்கு மாநாடு வழிவகுக்கும். பா.ம.க., தலைமையில் ஆட்சி அமைத்தால், இடஒதுக்கீட்டிற்கான கையெழுத்தை நாமே போடும் நிலை ஏற்படும்.'மாமல்லபுரம் மாநாட்டை தமிழ்நாடே திரும்பி பார்க்கும் வகையில் அமையும். மாமல்லபுரம் மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும்' என்றார்.மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேசுகையில், 'அன்புமணிதான் வருங்கால தமிழக முதல்வர்' என பேசி, கட்சியினர் மத்தியில் கைதட்டலை பெற்றார். மேலும் அவர் பேசுகையில், 'டில்லியில் அன்னா ஹாசாரே பின்னால் இருந்த ஒருவர் ஆட்சியை பிடிக்கும்போது, பா.ம.க., ஏன் ஆட்சியை பிடிக்கக்கூடாது.

நீங்களும் அமைச்சர்தான்

'வரும் தேர்தலில் அன்புமணி முதல்வராகி விட்டால், இங்கு பேசிய சேலம் எம்.எல்.ஏ., அருள் அமைச்சராகிவிடுவார்' என்றார்.இடையே குறுக்கிட்ட ராமதாஸ், 'அருள் என்ன துறைக்கு அமைச்சர்' என கேட்கிறார் என்றார். அதற்கு, 'அருள் எந்த துறையை கேட்கிறாரோ அதை அவருக்கு அன்புமணி கொடுக்க போகிறார்' என்றார்.இதே போல் சமூக நீதி பேரவை பாலு சட்ட அமைச்சர், திலகபாமா மகளிர் துறைக்கு அமைச்சர் என பல்வேறு நிர்வாகிகள் பெயரை கூறி, அமைச்சராகி விடுவர் என பேசினார். உடனே, நீங்களும் அமைச்சர்தான் என மேடையில் இருந்த ஒருவர் கூறினார்.மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மாநாடு, கட்சியின் தலைவர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் மாநாடாக அமையும் என, நிர்வாகிகள் மத்தியில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இளைஞரணி தலைவர் 'அப்சென்ட்'

கடந்த டிசம்பர் 28ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாசின் மகள் வழி பேரன் முகுந்தன், கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சி தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால், முகுந்தன் செயல்பட முடியாமல், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.கடந்த 16ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனத்திற்கு வந்த முகுந்தனுக்கு, பா.ம.க.,வினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர், தைலாபுரம் சென்று தன் தாத்தா ராமாதாஸ், பாட்டி சரஸ்வதி ஆகியோரிடம் ஆசி பெற்றுச் சென்றார்.ஆனால், திண்டிவனத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், கூட்டம் நடந்த மண்டபத்திற்கு எதிரில் முகுந்தன் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பல்லவி
மார் 18, 2025 20:00

மரம் வெட்டி வாழ்க்கை வாழ்ந்த காலம் போய் விட்டது


Vel Arumugam
மார் 18, 2025 19:59

காங்கிரஸ் கட்சியின் உடன் இல்லனா தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் சூப்பர் டாக் sir


pv, முத்தூர்
மார் 18, 2025 17:22

மங்கா பாய்ஸ் காமடி தாங்கமுடியல.


பாரத புதல்வன்
மார் 18, 2025 15:36

அமெரிக்க அதிபர் பதவி க்கு நிக்கலாம்... அந்த அளவுக்கு தகுதி உள்ளது..... என்ன .... அங்கெல்லாம் மரம் வெட்ட முடியாதுங்கோ!!!!


கிஜன்
மார் 18, 2025 08:56

டாக்டர் ...முதல்வர் ..நிழல் படஜெட் லாம் ஒரே போர் .... நீக்க அடுத்தலெவலுக்கு போங்க ... நீங்க தான் ராஷ்ட்ரபதி .... புதல்வர் ..பிரதமர் .... மருமகள் உள்துறை ...


முக்கிய வீடியோ