உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: இன்னொரு யோகி ஆதித்யநாத்?

டில்லி உஷ்ஷ்ஷ்: இன்னொரு யோகி ஆதித்யநாத்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது; ஆனால், இதுவரை யார் முதல்வர் என்பது முடிவாகவில்லை.ஆம் ஆத்மி கட்சியை, பா.ஜ., தோற்கடித்தாலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவு தான். பா.ஜ.,விற்கு 45.56 சதவீதம்; ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீதம். இந்நிலையில், 'மீண்டும் கெஜ்ரிவால் தலை எடுக்காமல் இருக்க, மிகவும் வலிமையான, அதிரடியாக செயல்படக்கூடியவர் தான் முதல்வர் பதவியில் அமர வேண்டும். மேலும், அவர் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும்' என, கட்சி மேலிடம் விரும்புகிறதாம்.'நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்தவர்கள் டில்லியில் அதிக அளவில் குடியேறி விட்டனர். இவர்களை ஒடுக்கவும், நாடு கடத்தவும் ஒரு திறமையான, அதே சமயம் கடுமையான முடிவுகளை எடுப்பவராகவும் முதல்வர் இருக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.முதல்வர் பதவிக்கு பல பெயர்கள் அடிபடுகின்றன. அவர், ஒரு பெண்ணாக இருக்கலாம்; பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் அல்லது கெஜ்ரிவாலைத் தோற்கடித்த, பர்வேஷ் சாஹிப் சிங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thiyagarajan S
பிப் 18, 2025 13:42

RSS BJP இவர்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர் நிச்சயமாக இந்த தேசத்தின் மீது இந்த தர்மத்தின் மீது பற்று உள்ளாராகவே இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால் டெல்லியில் குவிந்துள்ள அன்னிய ஊடுருவல் காரர்களை வெளியேற்றுவதில் சற்று வேகம் உள்ளவராக இருத்தல் அவசியம்...


Karthik
பிப் 16, 2025 18:25

தேசப்பற்றுள்ள ஆர் எஸ் எஸ் நபர் ஒருவரை நியமிப்பதே சரி / தற்போதைய தேவை - அவசியம்.


V Gopalan
பிப் 16, 2025 16:32

Inspite of court directions to deport illegal immigrants, the Govt is yet to take action whereas we are getting back our citizens back. Shame.


subramanian
பிப் 16, 2025 11:17

தேசப்பற்றுள்ள ஆர் எஸ் எஸ், பா ஜ க வாழ்க.


R Vijayaraghavan
பிப் 16, 2025 10:01

யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் சட்ட விரோதமாக நமது நாட்டில் உள்ளவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை