புதுடில்லி: ரயிலின், 'ஏசி' முதல் வகுப்புப் பெட்டியில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல ஏதுவாக, 'ஆன்லைன்' முன்பதிவு வசதியை ரயில்வே நிர்வாகம் துவங்கி இருப்பது பயணியரின் வரவேற்பை பெற்றுள்ளது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை ரயிலில் கொண்டு செல்ல, ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தை பயணியர் அணுகும் நிலை இருந்தது. தடுப்பூசி
நீண்ட வரிசையில் காத்திருத்தல், சக பயணியரின் ஒப்புதல், மருத்துவ சான்றிதழ், தனி கூபே புக் செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவற்றை ரயிலில் அழைத்துச் செல்வதை பயணியர் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், ரயிலின் 'ஏசி' முதல் வகுப்பில் செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. ரயில் பயணத்தின் போது, 3 மணி நேரத்திற்கு முன் செல்லப் பிராணியை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் நகலுடன், எல்லா தடுப்பூசிகளையும் செலுத்திய சான்றிதழ்களை காண்பித்தல் அவசியம். சான்றிதழ்
அதேபோல், ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன், கால்நடை டாக்டரிடமிருந்து பெற்ற உடல்தகுதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். இந்தக் கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ள முறை, ரயில் பயணியரிடம் உரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 700க்கும் மேற்பட்ட பயணியர், இந்த முறையை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.