குறுக்கு வழியில் தி.மு.க., ஆட்சி: மாஜி உதயகுமார் ஆவேசம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: பருவ நிலை மாற்றத்தால், வெயில் கொதிநிலை 105 டிகிரியை கடந்து மக்கள் வேகாத வெயிலில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க.,வின் கொதிநிலை வேறாக இருக்கிறது. உதயநிதியை என்றைக்கு துணை முதல்வராக அறிவிப்பது என்ற கொதிநிலையில் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுதும் உதயநிதி, துணை முதல்வராக்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலில் மக்கள் தவிப்பது போன்றதொரு மாயத் தோற்றத்தை தி.மு.க., தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க., பவள விழா கண்ட கட்சி என பெருமை பேசுவதோடு, பல முறை ஆட்சிக்கு வந்த கட்சி என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அண்ணாதுரைக்குப் பின், அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி, குறுக்கு வழியில் தான் ஆட்சிக்கு வந்துள்ளனர் தி.மு.க.,வினர். தமிழகத்தின் துணை முதல்வராக விருப்பப்படும் உதயநிதி, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்காகவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்கும் உரிய பதில் தருவதோடு, சட்டம் - ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க முன் வருவாரா?இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.