மேலும் செய்திகள்
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!
27-Jul-2025
வடகிழக்கு மாநிலமான அசாமில், வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் சட்டவிரோத குடியே றிகளாக கருதப்பட்டு, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மாநில அரசு சமீபத்தில் மேற்கொண்டது. தரைமட்டம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வந்த முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியின மக்களை வெளியேற்றும் நடை முறையை, மூன்று மாதங்களுக்கு முன்பே மாநில அரசு துவங்கியது. சமீபத்திய நடவடிக்கையாக, கோல்பாரா, துப்ரி, சாருவாபாக்ரா, சிரக்குட்டா, கார்பி அங்லாங், திமா ஹாசோ உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்கள் வீடுகள், கடைகள் புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கப்பட்டன. த லைமுறைகள் தாண்டி வாழ்ந்த பகுதிகளும், நிலங்களும், வயல்களும் அழிக்கப்பட்டன. வங்கதேசத்தினர் என அறியப்பட்டவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அந்நாட்டு அதி காரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டனர். இந்த வெளியேற்றம், சட்டப்பூர்வ நடவடிக்கை என மாநில அரசு கூறினாலும், 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை, திடீரென வெளியேற்றுவது, மனிதாபிமானமற்ற செயல் என்ற கருத்தும் நிலவுகிறது. இதன் தாக்கங்கள் நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் என பிற வட கிழக்கு மாநிலங்களுக்கும் நீண்டுள்ளன. எல்லை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கை, மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்தை இறுக்குகின்றன. எதிர்பார்ப்பு நாகாலாந்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இடைமறித்த போலீஸ், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. மேகாலயாவில் சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க சமூக கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அருணாச்சலில், இதற்கான விழிப்புணர்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை நடந்தது என்ன என்பதை தாண்டி, அடுத்து நடக்கப்போவது என் ன, யாரை வெளியேற்றுவர் போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பயம் ஒரு தொற்றுநோயாக மாறி, உண்மையை விட வே கமாக பரவி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலில், ஈர இதயங்களால் ஆங்காங்கே இரக்க மின்னல்களும் மினுமினுக்க துவங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவர் இயக்கங்கள், நற்பணி மன்றங்கள் என பலவிதமான அமைப்புகள் துணிமணிகளையும், உணவுகளையும் வழங்கி வருவது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இது, நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. சொந்தம், உறவு போன்றவை வெறும் காகிதத்திலோ, ஆவணங்களிலோ இல்லை; அது, திசை தெரியாமல் தத்தளிப்பவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், வெளியேற்ற நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. எழுபதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளின் முற்பகுதியிலும், வெளிநாட்டினருக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி அசாம் உட்பட பல்வேறு இடங்களில் வன்முறைக்கு வழிவகுத்தது. தற்போதைய வெளியேற்ற நடவடிக்கையும், அந்த சூழலுக்கு தள்ளக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அடையாளத்தை மறந்து, வேறு நாட்டுக்கு செல்வது வேதனையானது என்பதால், இந்த விஷயத்தில் அரசு கூடுதல் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது - நமது சிறப்பு நிருபர் -.
27-Jul-2025