உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நோக்கம் சரி; செயல் தான் சிக்கல்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நோக்கம் சரி; செயல் தான் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ோலி வாக்காளர்களை களையெடுக்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஏன் அவசியம்? இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், இங்கு சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், போலி வாக்காளர்களை களை எடுக்க தலைமை தேர்தல் கமிஷன், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. ஒ ரு மாதமாக நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, கடந்த 25ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில், 64 லட்சம் பேர் போலி என கண்டறிந்து, பட்டியலில் இருந்து நீக்கப்போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக் கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தச் சூழலில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக, உண்மையான வாக்காளர்களை கூட பட்டியலில் இருந்து, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதை தேர்தல் கமிஷன் ஆதா ரப்பூர்வமாக முழுமையாக மறுத்துள்ளது. 'பூத் அளவிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பூத் அளவிலான கட்சிகளின் ஏஜன்டுகள் கொடுத்த தரவுகள் அடிப்படையிலேயே வாக்காளர் பட்டியலில் இருந்து 64 லட்சம் வாக்காளர்களை நீக்கும் முடி வு எடுக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் 'மரணம், நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடிபெயர்தல், பல்வேறு இடங்களில் பெயர் பதிவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்ய முடியாத நிலை என, நான்கு பிரிவுகளின் கீழ், பெயர் நீக்கம் செய்யப்பட்டன' என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த நான்கு பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. அதாவது, 22 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர்கள். 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், அல்லது எங்கு வசிக்கின்றனர் என்றே கண்டறிய முடியாதவர்கள். 7 லட்சம் பேர் பல்வேறு பகுதிகளில் பதிவு செ ய்தவர்கள் என, தேர்தல் கமிஷன் கூறுகிறது. இந்த காரணங்கள் தான், சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது மிகவும் தேவையானது. இதன் வாயிலாக தேர்தல் மிகவும் நியாயமாக நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் கூறுகிறது. தேர்த ல் கமிஷனின் இந்த நோக்கத்தை யாரும் சந்தேகிக்கவில்லை. அதே நேரம், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக அரசு வழங்கிய ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஏற்காமல் பிடிவாதம் பிடித்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . வாக்காளர்கள் சரிபார்ப்புக்கு ஆதார், பான், ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவணமாக கருதுமாறு, உச்ச நீதிமன்றம் கூட வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்படி இருந்தும் கூட, தேர்தல் கமிஷன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. குற்றச்சாட்டு ஆதார் வெறும் அடையாள சான்று என்பதாலும், எண்ணற்ற போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாலும், இவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது என திட்ட வட்டமாக கூறியுள்ளது. இதை ஏற்க மறுத்த, ராஷ்ட்ரீய ஜ-னதா தளத்தைச் சேர்ந்த, பீஹாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் கமிஷன், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். தேர்தல் கமிஷனின் இந்நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும்படி, 35 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 'தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராடாமல் இருந்தாலோ, எதிர்ப்பு குரல் எழுப்பத் தவறினாலோ, மற்ற மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். 'குறிப்பாக அடுத்த சில மாதங்களில் எங்கெல்லாம் சட்டசபை தேர்தல் நடக்கிறதோ, அந்த மாநிலங்களில் எல்லாம் இந்நிலை ஏற்படும்' என, அந்தக் கடிதத்தில் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டிருந்தார். முறைகேடுகள் இல்லாமல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்க வேண்டுமென்ற நோக்கிலேயே, சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ அதை முழுமையாக ஏற்க மறுக்கின்றன. ஆளும் அரசுக்கு சாதகமான பலனை தரவே, இந்நடவடிக்கை என குற்றஞ்சாட்டுகின்றன. நடுநிலை தவறாத தேர்தல் கமிஷன் இப்படி மறைமுகமான பணிகளில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே. அதே நேரம், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடக்கும் விசாரணை வாயிலாக நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். நடுநிலை தவறாத தேர்தல் கமிஷன் இப்படி மறைமுகமான பணிகளில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே. அதே நேரம், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடக்கும் விசாரணை வாயிலாக நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 11:11

மிகப்பெரிய குற்றச்சாட்டு சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் தொகையைவிட ஆதார் அட்டை எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான். முஸ்லிம்களே இல்லா பகுதி வாக்காளர் பட்டியலில் நாற்பது முஸ்லிம் பெயர்கள் உள்ளன. ஏராளமான இறந்தவர்களின் பெயர் நீக்கப்படவில்லை. வேறு மாநிலங்களில் வேலைக்கு இடம் பெயர்ந்த வாக்காளர்களின் ஓட்டை கள்ளக் குடியேறி வங்க ஆட்கள் போடுகின்றனர். மக்கள் எண்ணிக்கையை விட ரேஷன் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்படியே தொடர்ந்தால் லாலு போன்ற தண்டிக்கப்பட்ட கைதிகள்தான் ஆட்சிக்கு வருவர்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 28, 2025 09:52

போலி ஆதார் கார்டுகள், போலி ரேஷன் கார்டுகள் பெருகிவிட்ட இக்காலத்தில் அவைகளையே அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ள சொல்வது ஏற்புடையது அல்ல..... தவிர எதிர்கட்சிகள் என்றால் எல்லா திட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் தான் செய்வார்கள் காரணம் எதையாவது செய்து அதிகாரத்திற்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் நாட்டை பற்றி கவலையின்றி....இவர்களுக்காக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை திருத்தினால் நாடு எப்பொழுதுமே முன்னேறாது உச்ச நீதிமன்றமும் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பார்த்து வழவழ கொழகொழ தீர்ப்பை வழங்காமல் தேசத்திற்கு எது உகந்ததோ அதன் படி தீர்ப்பை வழங்கவேண்டும்..... ஆமாம் தேர்தல் கமிஷன் போலி வாக்காளர்களை நீக்கினால் ஆளும் மத்திய அரசுக்கு என்ன சாதகமாக அமையும்.....!!!


Subramanian
ஜூலை 28, 2025 03:06

The same opposition went to Supreme Court for using Aadhar against every government activity. Finally SC also gave a judgement that Aadhar to be used only for welfare schemes and not for identification purposes. Now they want Aadhar to be used. How they change their views depending upon their convenience


Vasudevamurthy
ஜூலை 28, 2025 07:42

Is there any authentic ID card for Indian Citizens if Aadhar card is not accepted?


முக்கிய வீடியோ