உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹார், தமிழக சட்டசபை தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பீஹார், தமிழக சட்டசபை தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டு உள்ளார். பீஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு, அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சிறிது காலமே உள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பா.ஜ., - காங்., கூட்டணிகளை தவிர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் க ளத்தில் குதித்துள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் பொறுப்பாளராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர், இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் பீஹாருக்கு செல்லும் இவர்கள், தேர்தல் உத்தி, பிரசாரம், தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி முடிவு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பூபேந்திர யாதவ்; இணை பொறுப்பாளராக திரிபுரா எம்.பி., பிப்லப் தேப் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக, அக்கட்சியின் லோக்சபா எம்.பி., பைஜயந்த் பாண்டா; இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல் நியமிக்கப்பட்டுள்ளனர் - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balamurugan
செப் 26, 2025 13:43

தமிழக அரசியல் களம் தனிமனித மக்கள் செல்வாக்கை சார்ந்தது. பிஜேபிக்கு மோடி எப்படி இந்தியாவின் முகமோ இங்க அண்ணாமலை தான். மக்கள் செல்வாக்கு மிகவும் முக்கியம். அதற்க்கு தகுந்தாற்போல பிஜேபி தனது கொளகையை மாநிலத்துக்கு மாநிலம் மற்றும் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவேண்டும். அண்ணாமலையை ஒதுக்குவதால் மக்களுக்கு இழப்பு பிஜேபிக்கு இழப்பு. அண்ணாமலைக்கு எந்த இழப்பும் கிடையாது.


vidhu
செப் 26, 2025 11:04

அண்ணாமலை இல்லாமல் தமிசத்தில் ஓட்டு கிடைக்காது. அவருக்கு பதவியை திரும்ப கொடுங்க இல்லாவிடில் நோட்டாவோடுதான் போட்டி


Moorthy
செப் 26, 2025 07:47

தமிழக அரசியல் பற்றி தெரிந்தவர்களா இவர்கள் ? எடப்பாடி பழனிசாமி , நைனார் நாகேந்திரன் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை சரியாக உச்சரிக்கவாவது தெரியுமா ?? நிச்சயமாக தமிழும் புரியாது நம்மவர்களுக்கு இந்தியும் வராது , விளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை