உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திராவிட கட்சிகள் பாணியில் கவனிப்பில் இறங்கும் பா.ஜ.,

திராவிட கட்சிகள் பாணியில் கவனிப்பில் இறங்கும் பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்த, திராவிட கட்சிகளின் பாணியில், 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை, 'கவனிக்கும்' பணியில், தமிழக பா.ஜ.,வும் ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியான தி.மு.க., சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பங்கேற்போருக்கு அறுசுவை உணவுடன், 'கவனிப்பு' நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ip9duhum&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் மொத்தம் உள்ள 68,000 பூத்களில், பா.ஜ.,வுக்கு 50,000க்கும் அதிகமான, பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு கமிட்டியில், 12 பேர் உள்ளனர். தேர்தலுக்காக பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் பணியில், பா.ஜ., மேலிடம் இறங்கி உள்ளது. இதற்காக, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது. கடந்த 6ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில், பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்கள் குறித்து, மூத்த நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒவ்வொருவருக்கும் மூன்று பூத்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளைப் போல பெரிய கவனிப்புகளும், அடுத்தடுத்து உண்டு எனவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jagan (Proud Sangi )
ஜூலை 11, 2025 21:16

பிஜேபி இப்போ அதிமுகவாக மாறுகிறது . வரும் தேர்தலில் நைனார் பழைய அதிமுகவினருக்கே அதிக அளவில் சீட் வழங்க இருப்பதாக சந்தேகம் வேறு இருக்கு ஷிண்டே மாதிரி ஆகாம இருக்க EPS /நைனார் போட்ட பிளான்


தஞ்சை மன்னர்
ஜூலை 11, 2025 21:08

"" அறுசுவை உணவுடன், கவனிப்பு நடக்கிறது. "" இதில் ஆடு மாடு கோழி காடை கவுதாரி உண்டா? என்ன சைவ கட்சியாச்சே.அசைவம் கிடைக்குமா?இது தென்னகம் !வட நாடு போல சப்பாத்தி குருமா போடமுடியாது . ஹி ஹி... அப்போ கோமாதா வைத்து அரசியலும் செய்யமுடியாது


சந்திரன்,போத்தனூர்
ஜூலை 11, 2025 21:37

கோமாதா இருக்கட்டும், அதில் தஞ்சை மன்னருக்கு பிடித்த பன்றிக்கறியும் உண்டாம்..


Sivak
ஜூலை 11, 2025 21:49

சைவ கட்சியா? யார் சொன்னுது? ஒரு லாஜிக் வேணாமா?


தஞ்சை மன்னர்
ஜூலை 12, 2025 11:16

யார் யாருக்கு புத்தி எங்கே போகுமோ அங்கேதான் செல்லும்


Rajasekar Jayaraman
ஜூலை 11, 2025 12:40

வானதி, தமிழிசை, நைனார் கூட்டத்தை நம்பி கெட்ட அமித்ஷா.


சிவகுமார்
ஜூலை 11, 2025 11:29

தப்பே இல்லை அய்யா. நல்லதே நடக்கட்டும், தர்மம் தழைக்கட்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 10:58

வாக்காளர் பட்டியல் திருத்தம் முதலே பூத் ஏஜெண்ட்களின் பணி துவங்குகிறது. வசதியானவர்கள் இறங்கி வந்து பூத் வேலை பார்க்க தயங்குகின்றனர். அடித்தட்டு ஊழியர்கள் தயாராக இருந்தாலும் வருமான பாதிப்பால் வரத்தயங்கும் நிலை. அதனால் போக்குவரத்து, உணவுச் செலவையாவது கட்சி ஏற்க வேண்டியுள்ளது.


மூர்க்கன்
ஜூலை 11, 2025 16:50

ஒரே குஷ்டமப்பா?? இதையே வேறு கட்சி செஞ்சா கூலிக்கு மாரடிக்கிற கூட்டமா??


guna
ஜூலை 11, 2025 20:39

கொத்தடிமைகளுக்கு பாஜக பத்தி பேச தகுதி இல்லை.........


venugopal s
ஜூலை 11, 2025 10:03

அவனா நீ?


venugopal s
ஜூலை 11, 2025 10:03

யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை!


vivek
ஜூலை 11, 2025 11:47

அதுவே உன் சொம்பு இல்லை.. நீயே எங்கயோ ஆட்டைய போட்டது...போவியா


அப்பாவி
ஜூலை 11, 2025 09:47

ஓட்டுக்கு 2000 குடுப்பீங்களா?


vivek
ஜூலை 11, 2025 10:21

உனக்கு எல்லாமே ஒசில வேணும்.. ஏதாவது வேலை செய்து முதல்ல குடும்பத்தை காப்பாத்து கோவாலு


Mario
ஜூலை 11, 2025 08:47

பீகாரில் தொடரும் கொலைகள்: மணல் வியாபாரி சுட்டுக் கொலை


vivek
ஜூலை 11, 2025 10:20

மணிப்பூரில் தேடப்படும் குற்றவாளி....


SRIDHAAR.R
ஜூலை 11, 2025 07:18

அடிக்கு அடி சபாஷ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை