உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  அன்புமணி கடும் எதிர்ப்பால் ராமதாசை சேர்க்க பா.ஜ., மறுப்பு

 அன்புமணி கடும் எதிர்ப்பால் ராமதாசை சேர்க்க பா.ஜ., மறுப்பு

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணியின் கடும் எதிர்ப்பால், ராமதாசை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.,வில் அப்பா - மகன் மோதல் முடிவுக்கு வராததால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 7ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், 'நான் தான் பா.ம.க., தலைவர்; என்னுடன் மட்டுமே கூட்டணி பேச முடியும்' என்றார். ஆனாலும் ராமதாசை, அ.தி.மு.க., - பா.ஜ., கண்டுகொள்ளவில்லை. கூட்டணி தொடர்பாக, தி.மு.க.,வுடன் ராமதாஸ் தரப்பு பேசி வருகிறது. வி.சி., எதிர்ப்பு, களத்தில் வி.சி., - பா.ம.க., தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் எனக்கூறி ராமதாசை சேர்க்க, தி.மு.க., தயக்கம் காட்டுகிறது. இதற்கிடையில், 'ராமதாசை சேர்த்தால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் தேவையற்ற குழப்பம் வரும். ஜி.கே.மணி போன்றவர்களுக்காக, களத்தில் நாங்கள் தேர்தல் வேலை பார்க்க முடியாது' என, அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், ராமதாசை சேர்க்க, அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்களும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாமா அல்லது 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடலாமா என, ராமதாஸ் ஆலோசித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ராமதாஸ் கண்டனம்

மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னம் இடம்பெற் றது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், 'நான் நிறுவிய பா.ம.க.,வின் வரலாற்று சின்னமான மாம்பழம், மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது சட்டவிரோதமானது; தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல். தேர்தல் கமி ஷன், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை