வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எத்தனை பேரை நியமித்தாலும் எந்த பிரயோஜனமும் கிடையாது. வேர் பிடித்து வளரும் நேரத்தில் வெந்நீரை ஊற்றி விட்டார்கள்.
டெல்டா மாவட்டங்களில் வசிப்போருக்கு மோடியின் விவசாயிகளுக்கான வருடம் ரூ6000 வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை
ஆமாம். அப்படியே டெல்டா மாவட்டங்களிலிருந்து நியமிக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் பிஜேபி வளர்ந்து விடுமா? இங்கு டெல்டா மாவட்டங்களில் இருந்த பிஜேபி தலைவர்கள் பெரும்பான்மையினர் தீயமுகவிலிருந்து வந்தவர்கள். அவர்களின் முகம் கூட கிராமத்திலிருக்கும் ஒரு விவசாயிக்கு தெரியாது. அவர்கள் எந்த ஒரு கிராமத்திற்கும் வருகை தந்ததோ, மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி விளக்கி, மக்களுக்கு அந்த திட்டங்கள் மூலம் பயன் கிடைக்க உதவியதோ கிடையாது. பதவிகளில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு தானும் மக்களை நேரில் சந்தித்து கட்சியை வளர்க்க மாட்டார்கள். உண்மையான பிஜேபி தொண்டன் பதவிக்கு வந்து கட்சியை வளர்க்கவும் விடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தீயமுகவின் ஸ்லீப்பர் செல்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையே உள்ளிருந்து கெடுப்பதுதான். அடுத்துக் கெடுக்கும் துரோகிகள். பிஜேபி தமிழகத்தில் வளர விரும்பினால் நேரடியாக மக்கள் ஆதரவை பெறுங்கள். தீவிர RSS தொண்டனை பதவிக்கு கொண்டு வாருங்கள். தன்னலமற்ற அவர்களின் தொண்டால் மக்கள் பிஜேபியை நம்புவார்கள். மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு எந்த வித கட்சி பதவியும் கிடையாது என்று தீர்மானமாக இருங்கள். மக்கள் ஆதாயத்திற்காக கட்சி மாறி ஓட்டு போடலாம். ஆனால் கொள்கை என்று பேசும் ஒரு கட்சிக்காரன் கட்சி மாறினால் அவன் கேவலமான பச்சோந்தி. அவர்கள் உள்ளிருந்து அடுத்துக் கெடுக்கும் துரோகிகள்.