உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இது தி.மு.க.,வினர் உலவும் பகுதி: எச்சரிக்கை பலகை வைக்க பா.ஜ., யோசனை

இது தி.மு.க.,வினர் உலவும் பகுதி: எச்சரிக்கை பலகை வைக்க பா.ஜ., யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர், தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை வடபழனி ஆற்காடு சாலை அருகில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது, விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் அல்லக்கைகளான, அக்கட்சியின் 136வது வட்ட பொருளாளர் கார்த்தி மற்றும் வினோத், போலீசார் கண்முன்னே கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்ற விழாவில், பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், இதே பிரபாகர் ராஜாவின் அடியாட்கள் தான். தொடர்ந்து, அவரது அல்லைக்கைகளின் அராஜகம் அதிகரித்து கொண்டே இருந்தாலும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ரவுடிகள் மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குறைந்தபட்சம் இந்த இடங்களில், 'தி.மு.க.,வினர் உலவும் பகுதி; கவனமுடன் இருக்கவும்' என்ற எச்சரிக்கை பலகையாவது வைத்தால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramaswamy Sundaram
ஏப் 26, 2025 13:18

என்ன ஒரு அநியாயம்?


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 22, 2025 15:47

அப்படியே ஒரு போர்ட் கமலாயதுலையும் வச்சிடுங்க "இங்கு பெண்கள் பாதுகாப்பு குறைவு - எச்சிரிக்கை".


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 22:08

அப்படியா உ.பிஸ் சார்? சார்.


guna
ஏப் 22, 2025 13:36

டாஸ்மாக் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து திராவிட கொத்தடிமை நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல....


கிருஷ்ணதாஸ்
ஏப் 22, 2025 13:10

நல்ல யோசனை! சபாஷ்


Ramesh Sargam
ஏப் 22, 2025 12:37

அப்படி என்றால் தமிழகம் முழுவதும் அந்த எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும்.


பல்லவி
ஏப் 22, 2025 08:44

கண்ணாடி உள்ளே இருந்து கல் எறிந்து விட்டால் நமது கண்ணாடி முதலில் உடைந்து போகும் இது கூட தெரியாமல் போய் விட்டது


ஏமாளி
ஏப் 22, 2025 08:16

படுஜோர். துஷ்டனைக் கண்டால் தூர விலகு.


பேசும் தமிழன்
ஏப் 22, 2025 07:31

//திமுகவினர் உலாவும் பகுதி//.... இது நல்லா இருக்கே !!!


pmsamy
ஏப் 22, 2025 06:15

இவ்வளவுதானா நீ அரசியல் படிச்சது


vivek
ஏப் 22, 2025 06:36

இவ்வளவுதான் உன் சமச்சீர் கொத்தடிமை மூளைக்கு எட்டியது....


சமீபத்திய செய்தி