வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போலீஸ் அதை வாங்கி ஆளுங்கட்சி கிட்ட கொடுப்பாங்க. நீங்களும் அதைத்தானே செஞ்சிருப்பீங்க
கோவை: கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு, ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளது. அதனால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருப்போர் குறித்த உண்மை தகவலை சரிபார்க்க வேண்டும். அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைத்து, தி.மு.க.,வினர் நீக்கி இருப் பதாக தகவல். இறந்தவர்க ளின் பெயர்களை வைத்து கள்ள ஓட்டு போடவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், தி.மு.க., எதையும் செய்ய வில்லை. நம் ஆட்சியில் தான் நிறைய செய்திருக்கிறோம். அதைச் சொல்லி, இப்போதே ஓட்டு சேகரியுங்கள். நல்ல கூட்டணியை, அ.தி.மு.க., பொதுச்செ யலர் பழனிசாமி அமைப்பார். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், முறையாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அ.தி.மு.க. பூத் கமியிட் டில் யார் யார் உள்ளனர் என்ற விபரம் போலீசாரால் சேகரிக்கப்படுகிறது. அவர்கள், வேறு நோக் கத்துக்காக அதை சேகரிக்கின்றனர். அதற்கு கட்சியினர் யாரும் ஒத்துழைக்கத் தேவையில்லை. எக்கா ரணம் கொண்டு அவர்க ளுக்கு, பூத் கமிட்டி விபரம் செல்லக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
போலீஸ் அதை வாங்கி ஆளுங்கட்சி கிட்ட கொடுப்பாங்க. நீங்களும் அதைத்தானே செஞ்சிருப்பீங்க