உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்?

காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரசில், கட்சி பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற, மாநில தலைமை முடிவெடுத்துள்ளதால், மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இருந்தபோது, துணைத் தலைவர்கள் 52 பேர், பொதுச்செயலர் 52 பேர், செயலர்கள் 120 பேர் என, 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இவற்றில் சிலர், லெட்டர் பேடுகளையும், விசிட்டிங் கார்டுகளையும் வைத்துக் கொண்டு, அடிமட்ட அளவில் கட்சி பணிகளை கவனிக்காமல், மேல்மட்ட அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றபின், நிர்வாகிகளின் செயல்பாடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கட்சிப்பதவியில் உள்ளோர், 60 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த விபரங்களை சேகரித்துள்ளார்.அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்களின் பதவியையும் பறிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதேபோல், அம்பத்துார், மதுரவாயல் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை வைத்து, புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது. கட்சி அமைப்பு ரீதியாக, சென்னைக்கு மட்டும், எட்டு மாவட்ட தலைவர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது.கட்சி பணிகளை சிறப்பாக செய்து போராட்டம், கூட்டங்களை நடத்தி வரும் மாவட்ட தலைவர்களுக்கு, மாநில நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுதும், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைவர் வீதம், 117 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் தலைவர்கள் சிலர், தங்கள் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் பெயரை மாநில தலைமையிடம் பரிந்துரைத்ததும், டில்லி மேலிடம் ஒப்புதல் பெற்றபின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R K Raman
அக் 15, 2024 10:27

கிழித்து விடும் என்று பயமாக இருக்கிறதோ என்னவோ


ஞானி
அக் 14, 2024 19:50

முதலில் ராகுல் and co மாற்றவும் கட்சி உருப்படும்


Jysenn
அக் 14, 2024 19:01

கட்சியில் இருக்கிற 110 பேரையும் தலைவர் ஆக்கி விடுங்கள் .


Jysenn
அக் 14, 2024 19:00

பாஸ்டர் ரூபி மனோகரன் பிரார்த்தனை செய்ய மட்டுமே லாயக்கு. அவர் காங்கிரஸ் பாஸ்டர் விங்குக்கு தலைவர் ஆக வேண்டும் .


Balasubramanian
அக் 14, 2024 14:44

ஆமாம் இவர்கள் இல்லாமல் மாடல் அரசு ஆட்சியை பிடித்து விட முடியாது! அதற்கு தக்கபடி ஆட்களை தேர்வு செய்து அமைச்சர் அவையில் பங்கும் கேளுங்க!


ஆரூர் ரங்
அக் 14, 2024 12:26

கழுதைக்கு பதில் கோவேறுகள்.


Rangarajan Cv
அக் 14, 2024 11:10

This topic being discussed for several months. Till date no action.


raja
அக் 14, 2024 08:19

என்ன இன்னும் பல கோஸ்டிகள் உருவாகும்...கட்சி அலுவலகத்தில் வேஸ்டிகள் உருவப்படும்..சட்டைகள் கிழிக்கப்படும்... அவ்ளோதான்...


lana
அக் 14, 2024 05:57

அடேங்கப்பா காங் கட்சியில்தான் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பு கொடுக்க முடியும். எல்லாம் தலைவர். thondarkal கிடையாது


A VISWANATHAN
அக் 14, 2024 07:12

முதலில் ராகுலை மாற்றுங்கள் மற்ற எல்லாம் சரியாகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை