உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை விமான நிலையம்: அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியமே காரணம்

வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை விமான நிலையம்: அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியமே காரணம்

தனி வணிக மேம்பாட்டு பிரிவு இல்லாதது, விமான நிலைய ஆணையத்தின் அலட்சியம், தமிழக அரசின் பாராமுகம் போன்றவற்றால், சென்னை விமான நிலைய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். எனினும் தெளிவான திட்டமிடல் இல்லாதது, பயணியரை கையாள்வதில் அலட்சியம் போன்ற காரணங்களால், மற்ற விமான நிலையங்களை விட, சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/qU6CZVOEUGE

தனியார் மயம்

வளர்ச்சிக்கான பி.டி.யு., என்ற, வணிக மேம்பாட்டு பிரிவு, சென்னை விமான நிலையத்திற்கு தனியாக இல்லை.இப்பிரிவு, பசுமை மற்றும் புதிய விமான நிலையங்களை உருவாக்க உதவுவது; வணிக நோக்கங்களுக்காக காலியாக உள்ள நிலங்களை மேம்படுத்தி, விமான நிலைய ஆணையத்தின் வருவாயை பெருக்குவது; புதிய விமான வழித்தடங்களை ஈர்க்க, விமான நிறுவனங்களுடன் பேசுவது என, பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.நாட்டில் பெரும்பாலான விமான நிலையங்கள், தனியார் மயமாகி விட்டன.இதனால், அந்தந்த நிறுவனங்கள், தங்களின் சொந்த முயற்சியில், விமான நிலையத்தை மேம்படுத்துவது, புது சேவைகளை பெருக்குவது என, வளர்ச்சி பணிகளை நோக்கி முன்னேறி வருகின்றன.சென்னையில் கொரோனாவுக்குப் பின், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் சேவைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பு

தென்மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், சென்னை வளர்ச்சி அடைந்து வருகிறது என்றாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள், வளர்ச்சிப் பணிகள் போன்றவை, குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதில்லை.எனவே சென்னை விமான நிலையத்திற்கு, தனியாக வர்த்தக மேம்பாட்டு பிரிவு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் உபைதுல்லாஹ் கூறியதாவது:பெங்களூரு விமான நிலையம் தனியார் மயமாக்கலுக்குப் பின், பல விமான நிறுவனங்கள், புதிய சர்வதேச வழித்தடங்களை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுகின்றன.

நடவடிக்கை இல்லை

பெங்களூரு விமான நிலையத்திற்கு என, பிரத்யேகமாக வர்த்தக மேம்பாட்டு பிரிவு செயல்படுகிறது. பெங்களூரில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு, நேரடி விமான சேவை உள்ளது.ஆனால், சென்னைக்கு கிடைத்த, 'ஏர் பிரான்ஸ்' விமான நிறுவனத்தின் பாரீஸ் சேவை; ஆல் நிப்போன் ஏர்லைன்ஸின் டோக்கியோ சேவை, தற்போது இல்லை. இதை மீண்டும் கொண்டுவர, யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயங்கிய காலத்தில், சென்னையில் இருந்து- அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு விமானம் இயக்கப்பட்டது.அதேபோல், ரீ யூனியன் தீவு, செஷெல்ஸ் தீவு ஆகியவற்றுக்கும், விமானங்கள் இயக்கப்பட்டன; தற்போது இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் நேரடி சேவை இல்லை.சென்னையில் ஏற்கனவே இயங்கிய சேவைகள் பறிக்கப்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு சென்றுள்ளன.இவற்றை கண்காணித்து மீட்க, விமான நிலைய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் எந்த முயற்சியும் இல்லை!

விமான போக்குவரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பங்களிப்பு முதன்மையானது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அவசியம். சென்னைக்கு விமான சேவையை அதிகப்படுத்த, தமிழக அரசு, கடந்த ஆண்டு விமான நிறுவனங்களுடன் பேச்சு எதுவும் நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின், 2023ம் ஆண்டு ஒன்பது நாள் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றார். அப்போது, விமான போக்குவரத்து அமைச்சருக்கு, சென்னையில் இருந்து டோக்கியோவுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தக்கோரி, கடிதம் எழுதினார். அதன்பின், எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தி.மு.க., பொருளாளரும், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி.,யுமான டி.ஆர்.பாலு. சென்னை விமான நிலைய ஆலோசனை குழு தலைவராக உள்ளார். ஒவ்வொரு முறை ஆலோசனை கூட்டம் நடக்கும் போதும், விமான நிலைய வளர்ச்சி பணிகள், புதிய விமான சேவை குறித்து, அவர் பேச வேண்டும். ஆனால், எதுவும் பேசுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில், கடந்த 8ம் தேதி, சென்னை விமான நிலைய ஆலோசனை கூட்டம் பாலு தலைமையில் நடந்தது. அதிலும், சென்னைக்கு புதிய விமான சேவைகள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதிலும், அவர் கவனம் செலுத்த வேண்டும் என்பது, பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram Babu
பிப் 17, 2025 19:21

பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை பார்த்து கூட நமது அரசியல்வாதிகளுக்கு புத்தி வரவில்லை. இந்த இரண்டு நகரங்களும் போட்டி போட்டுக்கொண்டு சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டது. சென்னை விமான நிலையம் வெட்கித் தலை குனிய வைத்து விட்டது.


பல்லவி
பிப் 16, 2025 12:36

அரசியல் வாதிகள் கட்டிங் சரி வர போய் சேர்ந்தால் முன்னேறும் சான்ஸ் இருக்கும்


Ramesh Sargam
பிப் 15, 2025 21:11

இத்தனைக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிகம் பயணிப்பவர்கள் மாநில, மத்திய அரசு அமைச்சர்கள், அதிகாரிகள். அவர்கள் ஏன் விமான நிலையத்தின் தரத்தை உயர்த்த எந்தவித ஒரு முயற்சியும் எடுக்கவில்லை?


nv
பிப் 15, 2025 20:31

பெரிய நகரங்களின் விமான நிலையங்களில் மிகவும் மோசமான நிலயில் பராமரிக்கப்படும் விமான நிலையம் சென்னை தான்.. வெளிநாட்டவர் நம் சென்னையில் கால் வைத்தவுடன் அவர்களது கார் பிடிச்சு வெளியில் வருவதற்கு பெரும் பாடு பட வேண்டும்.. taxi டிரைவர் தொல்லை, buggies இல் லக்கேஜ் ஏற்றுவது பெரும் பாடு, உள்ளே வரும் போது trollies கிடைப்பது மிக அரிது!! பல கழிப்பறைகள் சரியாக பராமரிப்பு இல்லை, இப்படி பல பல அவலங்கள். சென்னைக்கு வெட்கக்கேடு நம் விமான நிலையம்.. தனியார் வசம் கொடுப்பது தான் நல்லது..


தமிழன்
பிப் 15, 2025 19:15

எல்லா துறைகளில் தமிழகம் கடந்த 15 வருடங்கள் பின் தங்கி தான் இருக்கு. தமிழனுக்கு விடிவு காலம் கிடையாது.


N Ganapathy subramanian
பிப் 15, 2025 12:42

திரிசூலம் ஸ்டேஷனில் எல்லா மெயில் எக்ஸ்ப்ரஸ் ரயில்களையும் நிறுத்துங்க. மக்கள் வருவதும் போதும் சுலபமாக வழி செய்யுங்க. மற்றது தானாக சரியாகும்


Gopalakrishnan Thiagarajan
பிப் 15, 2025 12:39

தில்லி விமான துறை அலுவலகத்தில் பெரும்பான்மையான அதிகாரிகள் அண்டை மாநிலத்தை சேர்த்தவர்கள்.பெங்களூரு,ஹைதராபாத், கொச்சி தனியார் விமான நிலயங்களுடன்ன கூட்டு சேர்ந்து சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கிறார்கள்.அதற்கு நமது மாநில அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் மோசமாகிறது.


ஆரூர் ரங்
பிப் 15, 2025 11:06

பரந்தூர் திட்டம் பலனளிக்காது. இருக்கும் நிலையம் மேம்படுத்த லாயக்கற்றது. பெரும்பாலான பயணிகள் தெற்கு ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தீர்வு? மதுரை கோவை விமான நிலையங்களை மேம்படுத்துவது. 2 ஆந்திரா செல்லும் வழியிலுள்ள விவசாயம் குறைந்த பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது .


venugopal s
பிப் 15, 2025 10:50

சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படும் மத்திய பாஜக அரசு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்ற உண்மையை மறைக்க பூசிமெழுகி மாநில அரசின் மீது ஏன் எல்லா குற்றங்களையும் சுமத்த வேண்டும்?


Seekayyes
பிப் 15, 2025 15:11

முதலில் உங்கள் விடியாமூஞ்சி அரசு பரந்தூரில் விமான நிலையத்திற்காக நிலகங்களை கையகப்படுத்தி தயாராக சொல்லுங்கள். பிறகு மத்திய அரசு மாற்றான் தாய் போல் நடக்கிறதா, பெத்த தாயாக நடக்கிறதா என்று பொறுப்பு துறப்பு செய்திகளை வெளியிடலாம். கபடநாடகம் ஆடிகொண்டே இருக்க கூடாது.


Seekayyes
பிப் 15, 2025 10:32

பரந்தூர் விமான நிலையம் வராமல் தடுக்க விமானத்திலேயே போகாதவர்கள், சாத்தியமில்லாதவர்கள் போராட்டம் செய்கிறார்கள், நிலம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாடு நாசமாக போக மத்திய அரசு ஒன்றுமே செய்ய வேண்டாம், இங்கேயே நிறைய அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு Toyota Crestaவில் போவதர்க்கு LTTE அனுதாபிகள் காசு கொட்டுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை