உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செக் பவுன்ஸ் வழக்கு; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

செக் பவுன்ஸ் வழக்கு; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி சிறப்பு நிருபர்

'செக் பவுன்ஸ் தொடர்பான வழக்குகளை, புகார் அளித்தவரின் வங்கி கிளை அமைந்துள்ள நீதிமன்ற அதிகார வரம்புக்குள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்' என, சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.செக் பவுன்ஸ் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881ன் கீழ், செக் பவுன்ஸ் வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.இந்த சட்டத்தின் பிரிவு, 138ன்படி வங்கி கணக்கில் போதிய நிதி இல்லாமல் இருக்கும் போது தான், குறிப்பிட்ட காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், குறிப்பிட்ட அந்த வங்கி எந்த பகுதியில் இருக்கிறதோ அந்த பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'குறிப்பாக பிரிவு, 138ன் கீழ் தாக்கல் செய்யப்படும் புகாரை விசாரிக்கும் அதிகார வரம்பு, பணம் பெறுபவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையின் அதிகார வரம்புக்குள் உள்ள நீதிமன்றத்திற்கு உரியது. 'இது தொடர்பாக, மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 2015ன் திருத்த சட்டத்தில் விதிமுறைகள் இதன் மூலம் தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kulandai kannan
நவ 29, 2025 20:44

நல்ல தீர்ப்பு. அலைச்சலுக்கு பயந்தாவது செக்கிற்கு பேலன்ஸ் வைப்பார்கள்.


Anantharaman Srinivasan
நவ 29, 2025 15:48

அதிகார வரம்பு எந்த கோர்ட்டுக்கு வேண்டுமானாலிருக்கட்டும். விரைந்து சரியான நீதி கிடைத்தால் போதும்.


சமீபத்திய செய்தி