உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க சொல்லி முதல்வர் கடிதம்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க சொல்லி முதல்வர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய அரசுக்கு எதிராக, நாளை தி.மு.க., நடத்த உள்ள ஆர்ப்பாட்டங்களில், நுாறு நாள் வேலை இல்லாததால் பாதிக்கப்பட்ட, கிராமப்புற தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்' என, கட்சி தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் துவங்கி, ஒவ்வொரு திட்டத்திலும், தமிழகத்துக்குரிய நிதியை, மத்திய அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் வழங்குவதில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z43nhr0m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் பார்வையுடன், தமிழகத்தை ஓரம்கட்ட நினைக்கிறது. நுாறு நாள் வேலை திட்டத்தில், மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் வாயிலாக, ஊதியம் வழங்கப்படுகிறது. எனினும், மத்திய அரசின் நிதி பங்களிப்பே, இதில் முதன்மையானது என்பதால், உழைக்கும் ஏழை மக்களுக்கு, முழுமையான அளவில், ஊதியம் வழங்க இயலவில்லை. தமிழகத்தை போலவே, கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும், நுாறு நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் இடையேயும் அதை எதிரொலிக்க செய்ய வேண்டும். எனவே, நுாறு நாள் வேலை திட்டத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை, உடனே விடுவிக்கக் கோரி, தமிழகம் முழுதும், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில், நுாறு நாள் வேலை கிடைக்காமல், பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழிலாளர்களையும், பங்கேற்க செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMESH
மார் 31, 2025 11:49

ஐநூறு கொடுத்தால் நாங்கள் ரெடி


ஆரூர் ரங்
மார் 28, 2025 09:20

பல ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் அவற்றில் வசிப்பவர்கள் நூறு நாள் பொழுதுபோக்கு திட்டத்துக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிட்டனர். இன்னும் பல வீட்டிலேயே பொழுதுபோக்கிவிட்டு அட்டெண்டன்ஸ் கொடுக்காததால் நிதி ஒதுக்கப்படவில்லை இவர்கள் எல்லாம் கூட்டி என்ன செய்யப் போகிறார்? வீட்டுக்குள் இருந்தே போராட்டம் செய்யவா?


அப்பாவி
மார் 28, 2025 07:22

டுபாக்கூர் திட்டத்தை ஒன்றிய, விடியல் அரசுகள் ஏன் தூக்கிப் பிடிக்கணும்? ரெண்டு பேரும். பொய்க்கணக்கு காட்டத்தான்.


ramesh
மார் 28, 2025 07:05

அடிச்சி விடு யாரு கேக்க போறா


இறைவி
மார் 28, 2025 05:57

நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. காரணம் அதில் இருந்த முறைகேடுகள். வேலையே செய்யாமல் உட்கார்ந்து இருந்து விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து சம்பளம் பெற்றுள்ளது அம்பலம் ஆகியுள்ளது. நீங்கள் தகுந்த ஆதாரங்களை கொடுத்து நிதியை பெற வேண்டியது தானே. அந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணம் பெறாத யாராவது ஒருவரை அந்த திட்டம் சிறப்பாக நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள். உட்கார்ந்து சம்பளம் பெற, மக்களை பிரித்தாள காங்கிரஸும், தீயமுகாவும் கொண்டு வந்த திட்டம். அதற்கும் ஒரு நாடகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை