உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

 விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து, விஜய் பலத்தை காட்டியதால், தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் 13 சதவீதம் உள்ளன. இவற்றில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் 6 சதவீதம் உள்ளன. ஜெயலலிதா மறைவிற்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு முழுமையாக கிடைத்து வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hwumj8c7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் காரணமாக, தி.மு.க., கூட்டணி சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்கவைக்க, தி.மு.க., தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அந்த மதத்தினரின் ஓட்டுகள் கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், த.வெ.க., சார்பில், மாமல்லபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில், முக்கிய கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பேராயர்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். பலர் வெளிப்படையாகவே, சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினர். இப்படி விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழா நடந்ததால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தரப்பு, அதற்கு போட்டியாக பாதிரியார்களை அழைத்து வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்தனர். சென்னை தலைமை செயலகத்தில், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ரூபன் மார்க், சி.எஸ்.ஐ., பாதிரியார் ஹேமசந்திரா, வேலுார், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். பெண்கள், குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு த.வெ.க., நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், ஆற்காடு இளவரசர் மகனும், திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி பேசியதாவது: நான் முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிறேன். என் மூத்த மகனுக்கு ஆபிரகாம் என்றும், இளைய மகனுக்கு ஜீசஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளேன். விஜய்க்கு போதுமான பணம், புகழ் உள்ளது. இருந்தும், மக்கள் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய இளைஞர் பலம் இருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. ஆனால், அவை அனைத்தும் மனிதத் தன்மையை போதிக்கின்றன. ஹிந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என, பாகுபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர். நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் உள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ***

எவ்வளவு பெரிய எதிரியையும் ஜெயிக்கலாம் பைபிள் கதை சொல்லி நம்பிக்கையூட்டும் விஜய்

த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில், விஜய் பேசியதாவது: பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்று எல்லா பண்டிகைகளையும் எல்லாரும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டாடும் மாநிலம் தமிழகம். இங்கு, வாழ்க்கை முறையும், வழிபாடு முறையும் வேறு வேறு என்றாலும், எல்லாரும் சகோதரர்கள் தான். உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லி தரும். அப்படிபட்ட நம்பிக்கை இருந்தால், எப்போதும் எப்பேர்பட்ட பிரச்னைகளையும் ஜெயிக்கலாம். அப்படிபட்ட நம்பிக்கையின் வலிமையை பற்றி சொல்வதற்கு, பைபிளில் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு இளைஞனுக்கு எதிராக, அவரது சொந்த சகோதரர்கள் பொறாமைப்பட்டு, அவரை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டனர். அதில் இருந்து அவன் மீண்டு வந்து, நாட்டுக்கு அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல; நாட்டையே எப்படி காப்பாற்றினான் என பைபிளில் சொல்லப்பட்டு உள்ளது. அந்த கதை, யாரை பற்றிய கதை என்று, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடவுள் அருள், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பு, அதீத வலிமை, அதற்கான உழைப்பு இருந்தால் போதும்; எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம். சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில், 100 சதவீதம் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்தவிதமான சமாதானமும் இருக்காது. கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழி நடத்தும். இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V.Mohan
டிச 23, 2025 19:45

ஐயா, என்ன ஒரு சிறப்பான , நடுநிலையான, ""மதசார்பில்லாத படிப்பினை"" மிகக் கொண்ட சிறப்புரை தந்த ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி சிறப்பாக பைபிள் கதை சொல்லி அறிவுரை தந்த ஜோசப் விஜய் அவர்களே உங்கள் ""கொள்கை தலைவர்"" "" கடவுளை நம்புகிறவன் அயோக்கியன் முட்டாள்"" என்று எந்நேரமும் பேசிய ராமசாமி நாயக்கப் பெரியாரை வணங்க மற்றும் போற்றிப் பேச உங்களுக்கு எப்படி ஐயா மனம் வருது???- திமுகவினர் போல ""எல்லாம் - பதவி சுகத்திற்கா""?? பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரியார் எந்த ஆணியும் பிடுங்கவில்லை. பெண்ணினத்திற்கு எந்த பெருமையும் சேர்க்கவில்லை வீரத்தமிழன் கவிஞன் பாரதியார் மட்டுமே பெண்ணினத்தை போற்றியவன். மற்றெவரும் பெண்ணின் இயலாமையை பயன்படுத்த, அவளது கோபத்தை மட்டும் தூண்டியவர்கள். பெண்ணின் பெருமைக்கு பாதை வகுத்தவன் பாரதி ஒருவனே. ஆக கடவுளை ஈனப்படுத்தியவரை தலைவர் என்று கொண்டாடும் விஜய், தனக்கென்ற கொள்கையை வகுக்காத வரை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க வருவார்களே ஒழிய செங்கோலை கையில் தந்துவிடுவார்கள் என நம்புவது சிறுபிள்ளைத்தனம்


kulanthai kannan
டிச 23, 2025 12:06

சபாஷ், சரியான போட்டி


surya krishna
டிச 23, 2025 09:03

சொரணை கெட்ட நடுநிலை நக்கிகளாக இருக்கும் இந்துக்களே பார்த்துக் கொள்ளுங்கள் எவன் எவன் எந்த மதத்திற்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளான் என்று திருப்பரங்குன்றத்தில் விஷயத்தில் இந்த விஜய் ஜோசப் எதற்கு வாயை திறக்கவில்லை இவன் உண்மையாக அரசியல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வந்திருந்தால் எதற்காக திறக்கவில்லை. இவனும் இந்துக்களுக்கு எதிரி தான் இந்துக்கள் ஓட்டு இவனுக்கு போகக்கூடாது


chandramouli mouli
டிச 23, 2025 07:14

நடிகனுக்கு அடிமையாகும் போக்கு தமிழனுக்கு எப்போ போகும் என்று தெரியவில்லை


naranam
டிச 23, 2025 06:26

பாதிரிகளுக்கு என்ன ஒரு கேவலமான பிழைப்பு!


s_raju
டிச 23, 2025 06:05

கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் அந்த மதத்தை சார்ந்த வேட்பாளத்திற்கு ஓட்டு போடும்போது ஹிந்துக்கள் ஏன் அவர்களை புறக்கணித்து பிறருக்கு வோட்டு போடக்கூடாது. மஹாபாரதம் சொலவ்து கெட்டவர்கள் சூட்ஷி செய்து பணம் கொடுத்து சத்யம் செய்து வோட்டு போட செய்கிறார்கள். சூட்க்ஷியை சூட்க்ஷியால் வெல்லவேண்டும். பணம் உங்களுடையது . எந்த தேர் தலில் என்று சொல்லாத வரை உங்கள் சத்தியத்தை நீங்கள் மீறவில்லை . எந்த பாவமும் இல்லை . மாறாக தி மு க வோட்டு போட்டால் எந்த கோவிலுக்கு போனாலும் உங்கள் வேண்டுதல் பலிக்காது .


முக்கிய வீடியோ